பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - § 9 கதைக் குக் கூட வெறும் கதை உரிமைக்காக மட்டுமே இருபத்தையாயிரம் முப்பதாயிரம் கொடுக்கிற படாதிபதிகள்இரவு பகலாக உறக்கம் விழித்து எழுதிய ஒரு நாவலை ஒரு நூறுக்கும், முந்நூற்றுக்கும் எப்படித்தான் கூசாமல் கேட்கிறார்களோ? ஆகவே அற்புதமாகவும், மிக வேகமாகவும் வளர்ந்திருக்கிற தமிழ் சினிமா உலகிலும் சுயபாஷையின் இரண்டொரு முதல் தரமான எழுத்தாளர்களுக்குக் கூடச் செளகரியமோ, இலாபமோ விளையவில்லை. அப்படி அல்லாமல் ஒரிரு ஏற்பாடுகள் நியாயமாக முடிந்தாலும் கூடத் திரைப்படத்திலோ, அதன் விளம்பரங்களிலோ, இன்னார் எழுதிய இன்ன நாவலிருந்து இந்தப் படம் தயாரிக்கப் பட்டதென்று மூலக் கதையின் பெயரும் மூலக் கதாசிரியனின் பெயரும் விளம்பரப்படுத்தப்பெறாமலேயே இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. - கதைகளையும் ஐடியாக்களையும் திருடுவதில் தேர்ச்சி பெற்று விட்ட ஒர் திரைக்கதை வசனகர்த்தாவின் சமீபத் தயாரிப்பாகிய படம் ஒன்று ஐந்நூறு தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதையிலிருந்தும், தொடர் கதைகளிலிருந்தும், நாவலி லிருந்தும், கொஞ்சம் கொஞ்சம்ாகத் திருடி ஒட்டுப்போட்ட கதையாக இருந்த காரணத்தால்- அந்த ஐந்நூறு பேரும் தனித்தனியாக மேற்படியாருக்கு நோட்டீஸ் விட்டிருக் கிறார்கள். "இந்த மூலக்கதை நான் எழுதினதே இல்லை. நாலு வருஷத்துக்கு முன்னாடி. வன்னு ஒருத்தர் அவசரத்துக்கு எங்கிட்டக் கொஞ்சம் பணம் வாங்கிட்டு தந்த ஒரு கத்தை ஸ்கிரிப்டைத் திருத்தி ஒழுங்கு பண்ணி இந்தப் படமா எடுத்திருக்கேன். என் மேலே தப்புச்சொல்றத்துக்கு ஒண்னுமே இல்லீங்க"-என்று எதிலிருந்தும் திருடாமல் சொந்தமாகத்தயார் செய்த் ஒரு சரட்டை விட்டு நோட்டீஸ் விட்டிருக்கிற ஐந்நூறு பேரையும் சமாளித்துப் புளுகிக் கொண்டிருக்கிறாராம். அந்தத் திரைக் கதை வசனம் + தயாரிப்பு + டைரக்ஷன் + தயாரிப்பு + ஆளர். தமிழ் எழுத்தாளர்கள் இந்த விதமாகத் திரைப்படத் துறையிலும் அசெளகரியங்களையே அடைகிறார்கள். இதைத் தவிர இலக்கிய வளமும், கதாபாத்திரங்களை அமைப்பதில் தேர்ச்சியும் உள்ள தமிழ் எழுத்துலக ஜாம்பவான்கள் கூடத் திரைப்படத் தயாரிப்பாளர்களால் அவம்ானப்படுத்தப் படுகிறார்கள்.