பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்" 巫 பார்த்தசாரதி) "எங்களுக்கு இலக்கியமும் வேண்டாம்! வெங்காயமும் வேண்டாம். பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்! ஆகிற மாதிரி ஒரு படத்தைத் தயாரிக்கணும். அதுக்கத் தகுந்த மாதிரி யார் எழுதறானோ, அவனை வச்சு எங்க காரியத்தை நாங்க முடிச்சுக்குவோம் - என்று வறட்டுக் கர்வம் பேசுகிற படாதிபதிகளைப் பார்த்துத் தமிழ் எழுத்தாளனின் ஏழை இதயம் நீண்ட நாட்களாகக் கொதிப்படைந்து போயிருக்கிறது. பத்திரிகை வெளியீடுகளிலும், புத்தகப்பதிப்பு விற்பனையிலும், திரைப்படத் துறையிலும் அடைகிற அசெளகரியங்களை விடச் சொந்தமாகவே தமிழ் எழுத்தாளனுக்கு ஒர் அசெளகரியமும் உண்டு. அதுதான் ஒற்றுமையின்மை, எந்த ஒரு தமிழ் எழுத்தாளனும் தான் கஷ்டப்படுகிற போதுகூடத் தன்னோடு ஃபீல்டில் இருக்கிற சக எழுத்தாளனின் அனுதாபத்தையோ, ஆதர்வையோ பெற முடிவதில்லை. அவ்வளவேன்? தார்மீக ஆதரவு என்று சொல்லப்படுவது கூட ஒரு தமிழ் எழுத்தாளனிட மிருந்து மற்றொரு தமிழ் எழுத்தாளனுக்குக் கிடைக்குமென்று உறுதியாகவோ நம்பகமாகவோ சொல்லிவிட முடியாதபடி இருக்கிறது இன்றைய நிலைமை. எல்லா அசெளகரியங்களை யும் விடப் பெரிய அசெளகரியம் இது ஒன்றுதான் என்று நினைக்கிறேன் நான். . . - சங்கங்களும், மன்றங்களும் மாநாடுகளும், கருத்தரங்கு களும் ஒன்று கூடுகிறபோது, ஃபிஸிகலாக ஒரே மேடையில் சேர்ந்து பேசியும், சேர்ந்து உட்கார்ந்தும், சேர்ந்து உணவருந்தியும் ஒருமைப்பாட்டைக் கடைப்பிடித்தது போலக் காண்பித்து விட்டாலும் தமிழ் எழுத்தாளர்களுக்குள்ளே, தேவைக்கு அதிகமான அபிப்ராய பேதங்களும், போட்டி பொறாமைகளும் நிறைந்திருக்கின்றன என்பதை நாசூக்காக மறைத்து விடு வதற்கோ, மழுப்பி விடுவதற்கோ இல்லை. - எல்லா மொழி எழுத்தாளர்களுக்கு உள்ளேயும் இப்படி அபிப்ராய பேதங்களும் போட்டி பொறாமைகளும் இருக்கின்ற னவே!தமிழ் எழுத்தாளர்களுக்குள் இருப்பதும் இயல்புதானே? என்று நீங்கள் கேட்கலாம். பாதிக்கிற அபிப்ராய பேதங்கள், பாதிக்காத அபிப்ராய பேதங்கள்-என்று இரண்டுவிதம் உண்டு. தமிழ் எழுத்தாளர்களுக்குள் இருக்கிற அபிப்ராய பேதங்களோ தனித்தனியாக ஒவ்வொரு வரையும், மொத்தமாகப் பலரையும் இலக்கிய வாழ்வில் பாதிக்கிற அபிப்ராய பேதங்களாகவே