பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன் } 404 இருக்கின்றன. அதனால்தான் இந்த அபிப்ராய பேதமும் தமிழ் எழுத்தாளனின் மிகப் பெரிய அசெளகரியங்களில் ஒன்று என்பதாகக் குறிப்பிட்டேன். மேலே கண்ட கட்டுரையைத் திருச்சிராப்பள்ளியிலிருந்து எழுத்தாளர்களுக்காகவே வெளிவரும் மாத இதழான எழுத்தாள னில்-1965 ம் ஆண்டு பொங்கல் மலரில் நான் எழுதியிருந்தேன். நான் சார்ந்திருந்த பத்திரிகை நிறுவனத்தையும், பிற தமிழ்ப் பத்திரிகை முதலாளிகளின் ஊழல்களையும் ஓரளவு இந்தக் கட்டுரையில் வெட்ட வெளிச்சமாக்கியிருப்பதால் இதை வெளியிடுவதின் மூலம் என் சொந்த வாழ்க்கை பாதிக்கப் படுமோ என முன்பாகவே எண்ணித்தயங்கவோ, பயப்படவோ செய்யாமல் துணிவாக என் சொந்தப் பெயரில், நான் தான் எழுதியிருக்கிறேன் என்று தெளிவாக இன்னொருவருக்குத் தெரியும்படியே எழுதியிருந்தேன் நான். பத்திரிகை அலுவலக நிர்வாகங்களில் நான் கண்ட ஊழல்களைத் தெரிவிப்பதிலோ, ஊரறிய வெளியிடுவதிலோ, எனக்குப் பயம் எதுவும் கிடையாது என்று என்னைச் சுற்றியிருக்கிறவர்களுக்கு வலியுறுத்தவே நான் மேற்படிகட்டுரையை எழுதினேன். வேலையைப் பற்றிய பயம் எனக்கு இருந்திருக்குமானால் மேற்படி கட்டுரையை வேறு ஏதாவது புனைப் பெயரிலோ,பொய்ப்பெயரிலோ எழுதியிருக்க முடியும். ஆனால் அது என் நோக்கமில்லை. அஷ்டாங்க மந்திரத்தைக் கோபுரத்தின் மேலேறிச் சொல்லிய போது இராமானுஜருக்கு எத்தனை பெருமிதம் இருந்ததோ அத்தனை பெருமிதம் இந்தக் கட்டுரையை எழுதிய போது எனக்கு இருந்தது. அதை உணராமல் நன்றியற்றவர்களும், நயவஞ்சகக் காரர்களுமாகிய பத்திரிகை முதலாளிகளின் தயவை மிகவும் கீழான முறையில் சம்பாதிக்க விரும்பிய ஒர் தமிழ் எழுத்தாளர் மேற்படிகட்டுரையைக்காட்டிக்கோள்மூட்டும் திருப்பணியைச் செய்தாராம். குப்பையும் கூளமும், ஊழலும் உண்மையற்ற போக்கும் மலிந்து விட்ட ஓர் இடத்திலிருந்து நான் வெளியேற வழி செய்து கொடுத்ததற்காக அந்த எழுத்தாளருக்கு நான் நன்றி செலுத்தக் கூடத் தயாராயிருக்கின்றேன். எனக்கு வேலை பற்றியோ, பிழைக்கும் வழி பற்றியோ, வயிற்றைக் கழுவுவது பற்றியோ, அதிகக் கவலையில்லை. ஆனால், கவலை உண்டு. ராஜாஜியைப் பெரியவர் பெரியவர் என்று தொழுது கொண்டா டும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே அவர் தமிழில்