பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

নেছ)—{লঞ্জ உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாதி) எழுதுவது.பெரும் பாவம்' என்று மேடைகளில் பேசிவந்தவன் ត្រាទាំ. - - நான் வேலை நீக்கப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன் பம்பாய் தமிழ்ச் சங்க விழா ஒன்றிற்குப் போய்ப் பேசினேன். அதில் 'பாரதியுகம் என்ற பொருளில் பேசுகிற தினத்தன்று, 'மகாகவி பாரதியின் வாக்கினால் புகழப் பெற்ற தேசபக்தர்கள் யாரும் இந்நாட்டிலே பெரும் பாக்கியசாலிகள், காந்தியடிகள், சிவா, வ.உ.சி. எல்லாரையும் தம் வாக்கால் பாடிய பாரதி, இராஜாஜியை மட்டும் பாட்வில்லை. பாரதியின் தலைமுறை யில் வாழ்ந்தும் அவர் வாக்கில் ஒருமுறை கூட விழாத இராஜாஜியைத்துர்ப்பாக்கியசாலியாகத்தான்கணக்கிட வேண்டி யிருக்கிறது" என்று பேசினேன். கூட்ட முடிவில் ஒரு சநாதனி 'நீங்க ராஜாஜியைப் பெரிதும் போற்றும் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து சம்பளம் வாங்கிக் கொண்டே இப்படிப் பேசுவது நியாயமா?" என்று என்னிடம் வந்து கேட்டார். "என் சொந்த அபிப்ராயசுதந்திரத்தை அடகுவைத்து நான் சம்பளம் வாங்கவில்லை. என் அபிப்பராய சுதந்திரத்தை நான் யாருக்கும் விற்கமாட்டேன்" என்று அவருக்கு ஆணித்தரமாகப் பதில் கூறினேன் நான், அவர் பின்னர் இந்த உரையாடலைப்பற்றி நான் வேலைப்பார்த்த இடத்துக்கு எழுதிப்போட்டதாகவும் கேள்வி. சுதந்திரமான சிந்தனைகளும் தன் மானமும் உள்ள ஓர் எழுத்தாளன், வியாபார ஆதிக்கமும், முதலாளிகளின் நைப்பாசைகளும் நிறைந்த பத்திரிகாலயக் கிடங்குகளில் எப்படி வாழ முடியாமற்போகிறதென்று கொஞ்சம் காரணகாரியங்க ளோடு பார்க்கலாம். - - - - சமீபத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை விழாவில் 'தேவன் பற்றிப் பேசத் தேவன் முன்பு வேலை பார்த்த பத்திரிகாலயத்தில் இப்போது வேலை பார்க்கும் ஓர் ஆள் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைப்பிதழில் பெயரும் அச்சடிக்கப் பட்டிருந்தார். கடைசியில் விழாவன்று அந்த ஆள் தேவனைப் பற்றிப் பேசவே வரவில்லை. விசாரித்தால், 'தேவனைப் புகழ்ந்து பேசுவது அவர் வேலை பார்க்கும் காரியாலய முதலாளிக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ? என்று அவர் பயந்து போனதாகத் தெரியவந்தது. இப்படிப்பட்டவர்கள் தமிழ் நாட்டில் நிறைய இருக்கிறார்கள். மலையாளத்திலும் வங்காளத்