பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@–(Fé உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி) பக்கங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறாரென்று அவர் கூறியதிலிருந்து அன்றைய தினம் அவரைப்பற்றி நான் முடிவு செய்தேன். "கொக்குக்கு ஒன்றே மதி' - என்பதுபோல் 'விளம்பர வருமானம் விளம்பரதாரர்களின் ஆதரவு - என்பதையே கவனத்தில் வைத்துக் கொண்டு - விஷயங்களின் உயர்வு: வெளியிடுகிற இலக்கிய அம்சங்களின் தரம்:- என்பவற்றை முற்றிலும் அலட்சியப்படுத்துகிற திமிங்கிலங்கள் தான் இங்கு பெரும்பாலான பத்திரிகை முதலாளிகளாயிருக்கிறார்கள். சாமர்த்தியத்தோடும் அசல் இலக்கியதாகக் தோடும் பத்திரிக்ைத் தொழிலில் நுழைகிற திறமை வாய்ந்த ஆசிரியர்கள், உதவியாசிரியர்கள், எழுத்தாளர்கள் கூட, நாளடைவில் மாறி ஒடுங்கிபத்திரிகைத் தொழிலில் தன்மானத்தையும் சுயமரியாதை யும் இழந்து விடுகிறார்கள். பழுதுபட்ட அல்லது தேய்ந்த இயந்திரங்களாகிவிடுகிறார்கள். ,, . " - எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் வாரப் பத்திரிகையில்-அந்தப் பத்திரிகை தொடங்கிய காலத்திலிருந்து வேலைபார்த்துவருகிற உதவியாசிரியர்கள் நான்கு பேருடைய நிலைகளை மாதிரிக்காக இங்கே கொஞ்சம் விளக்குகிறேன். ஒர் உதவியாசிரியர் புரூப் திருத்துவதும் வருகிற கதை கட்டுரைகளை வாங்கி வைப்பதும், பத்திரிகையின் காம்ப்ளிமெண்ட்ரி பிரதிகள் யார் யாருக்கு அனுப்பப்பட வேண்டுமோ-(இது ஆசிரியர் குழுவுக்குச் சம்பந்தமில்லாத) அவர்களுக்கு அனுப்புவதற்கான பட்டியலை வைத்துக் கொண்டு சரிபார்த்து அனுப்புவதும், நிர்வாகிகள் போய்ப் பார்த்து மாலிஷ் (உபசாரப் புகழ்) போடச் சொல்கிற ஆட்களுக்கு வகையாக மாலிஷ் போட்டுப் பூச்சூட்டுவதுமேவேலையாக இலக்கிய உணர்வே அற்றுப் போனவர். இவரை அட்வர்டிஸ்மெண்ட்மேனேஜர் தம் ரூமிலிருந்துஃபோனிலோ, நேரில் வந்தோ, யோவ்!கொஞ்சம் வந்துடடுப் போய்யா என்று விறகுக் கடையில் கூப்பிடுவது போல் (உதவியாசிரியர்களைக்) கூப்பிடுவதும்-சர்க்குலேஷன்மானேஜர் இவர்காலைச்சாய்த்து நடப்பதை நையாண்டி செய்து சிரிப்பதும்வழக்கம். . . . . இந்த நான்கு உதவி ஆசிரியர்களும், இவர்களைத் தேடி வந்திருக்கிற நண்பர்களுக்கு நடுவிலோ, எழுத்தாளர்களுக்கு நடுவிலோ-இலங்கை முதலிய வெளிநாடுகளிலிருந்து பார்க்க