பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன் H 107 வந்த பார்வையாளர்கள் அல்லது இரசிகர்களுக்கு நடுவிலோ எத்தகைய சூழ்நிலையில் அமர்ந்திருந்தாலும், 'யோவ்! கொஞ்சம் வந்துட்டுப் போய்யா'...... என்று தான் அழைக்கப் படுவார்கள். ஆனால் இவர்கள்முதலாளியை அழைக்கும்போது, மாமா இருக்கிறாரா?- 'மாமா வந்து விட்டாரா? என்று மாமாப் பட்டம் கொடுத்து அழைக்க வேண்டுமாம். இந்த 'மாமாப் பட்டம் நாளடைவில் அசிங்கமான அர்த்த முடையதாக உணரப்பட்ட பின்னால், பெரியவர் இருக்கிறாரா?” என்று மகா கெளரவமாக மாற்றப்பட்டது என்று செவிவழிச் செய்தி கூறுகிறது. - அதே காரியாலயத்தில் வேறு ஒர் உதவி ஆசிரியர் எப்போதோ அந்தப் பத்திரிகை முதலாளி எடுத்த ஓர் இந்திச் சினிமாப் படத்துக்கு வேறொருவர் வடக்கேயிருந்து எழுதின "ஸ்கிரிப்டைக் காப்பி எடுக்கவோ, உச்சரிப்பதற்குச் சொல்லிக் கொடுக்கவேர் வந்தவர்- அப்புறம் வேறு வழி இல்லாத காரணத்தால் பத்திரிகையில் தங்கி விட்டார், இன்று அவரும் தேய்ந்த இயந்திரமாகிச்சுயமரியாதையற்றுப்போயாயிற்று. இன்னொருவர் இந்தப் பத்திரிகை ஒரு காலத்தில் மதித்து வந்த வெளியூர் இலக்கிய வித்தகர் ஒருவரிடமிருந்து இந்தப் பத்திரிகைக்கு வரவேண்டிய கட்டுரைகளை உடனிருந்து பிரதிசெய்து தபாலில் அனுப்பிக் கொண்டிருந்தவர். இப்போது அந்த இலக்கிய வித்தகர் அமரராகி விட்டதாலோ என்னவோ காரியலயத்திலேயே தங்கி - இந்தக் காரியாலயம் வைத்துக் கொண்டிருக்கிற அல்லது இந்த காரியாலயத்தை வைத்துக் கொண்டிருக்கிற ஓர் அரசியல் தலைவருடனும் அவருடைய கூஜாவுடனும் வெளியூர்களுக்குப் போகவர இருக்கிறார். இவரைப் பற்றி ஒரு சுவாராஸ்யமான விஷயம். எங்கோ வெளியூருக்கு போனசமயத்தில் யாரோ ஒரு நண்பரிடம், நான் தான்நமது பத்திரிகையில் அரசியல் தலையங்கம் - உபதலை யங்கம் எல்லாம் எழுதுகிறேனாக்கும் பெரியவர் (அந்தக் காரியாலயம்வைத்துக்கொண்டிருக்கும்-அரசியல்தலைவருக்கும் இந்த பெயர்தானாம்) கூடப் பழகறதினாலே நான்தான் இதை இத்தனை லட்சண்மா எழுத முடியும்' - என்று பெருமையாக இரண்டு வார்த்தைகள் சொல்லிக் கொண்டு விட்டார் போலிருக்கிறது. அவ்வளவுதான் பிடித்தது.சனி இந்த வார்த்தை