பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம்'தீபம்' நா. பார்த்தசாரதி) நாவல் வெளியீட்டு விழாவிலே கலந்து கொள்கிறீர் ... நமக்குப் படியளக்கிறவர்களின் கோபத்தைக் கிளரச் செய்யாமல் வாயை மூடிக் கொண்டு சும்மா இருப்பது தான் பிழைக்கத் தெரிந்த வனுக்கு அழகு" என்று அவருடைய சகாக்களும் பிழைக்கத் தெரிகிற கலையை நன்கு கற்றுக் கொண்டவர்களுமாகிய சிலர் அவருக்கு யோசனை கூறியிருக்கிறார்கள். அவருக்கும் உள்ளுற நடுக்கம் வந்து விட்டது. எனவே முன்தகவல் கூடத் தெரிவிக் காமல் - சொல்லாமல் கொள்ளாமல் விழாவுக்கு வருவதைத் தவிர்த்து விட்டார் அந்த உதவியாசிரியர், சொந்த நட்பு விருப்பு - வெறுப்பு - உறவு - பகை - மானாபிமானங்களைக் கூட உத்தியோகம் பார்க்கிற-எஜமானனிடத்தில் மொத்தமாக அடகு வைத்துவிடும், 'அவர் தலைவர் - அன்னவர்க்கே சரண் நாங்களே.-என்பதுபோன்ற அவர்க்கே நாம் ஆட்செய்வோம். வகையறா ஆட்களே சென்னையில் பெரும்பாலான் உழைக்கும் பத்திரிகையாளர்களாயிருக்கிறார்கள். இவர்களால் தொழிலின் மரியாதையையும் காப்பாற்ற முடிவதில்லை. சுயமரியாதையை யும் காப்பாற்ற முடிவதில்லை. - - - - வேறொரு சமயம் இன்னோர் உதவி ஆசிரியர்-பத்திரிகை முதலாளியிடம் அடைந்த அவமானகரமான அனுபவம் கேட்க அருவருப்பானது. இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் மனிதன் தன்மானத்துக்காகப் போராடுகிறானா என்பதை வைத்துத் தான் அவனுடைய தரத்தைக்கணிக்க முடிகிறது. அந்த உதவியாவிசிரி யர் தன் சிறுகதைகளைத் தொகுத்துத் தொகுதியாக வெளியிட்டி ருந்தார். தன் புத்தகம் 'வெளிவந்த மகிழ்ச்சியில் உதவியாசிரியர் ஒரு காரியம் செய்தார். இவர் மேலோ இவருடைய இலக்கியத் தொண்டின் மீதோ கடுகளவு நன்றியும் இல்லாத பத்திரிகை முதலாளியின் மேல் இவருக்கு நிர்பந்தமாக ஏற்பட்டுவிட்ட நன்றியின் (1) காரணமாக - இவருடைய புதிய சிறுகதைத் தொகுதிப்புத்தகத்தில் ஒன்றை எடுத்து, என்னை ஆட்கொண்டு காப்பாற்றி வரும் இன்னாருக்கு என்று பரிவோடு எழுதிக் கையெழுத்தும் போட்டுக் கொண்டு போய்ப் பயபக்தியோடு கொடுத்தாராம். - இவருடைய பயபக்தியையும் எஜமான விசுவாசத்தையும் புரிந்து கொண்டு நன்றி பாராட்டத் தெரியாத அந்த முதலாளி, 'சிறு கதைகளை வெளியிடுவதன் மூலம் இவருடைய புகழ்