பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்" நா.பார்த்தசாதி


ஒரு முறை கூறப்பட்டதென்று தெரிகிறது.

காதால் கேட்டு மனமும், உடம்பும் கூசக்கூடிய இந்தச் சுங்குடிப் புடவை உதாரணத்தைக் கேட்க நேர்ந்த உதவியாசிரியர் என்ன செய்தார் என்று நினைக்கிறீர்கள். பதினேழு பக்கத்துக்குக் கடிதம் எழுதி முதலாளியின்'பெருந்தன்மையையும் தன்னையும், தன் குடும்பத்தையும் ரட்சித்துவரும் அவருடைய உபகாரத் தன்மையையும்-பாராட்டி இனிமேலும் தன்னைத் தொடர்ந்து, ரட்சித்து வரவேண்டுமென்ற வேண்டுகோளுடன் தெரியாத்தனமாய் சிறுகதைத்தொகுதி வெளியிட்டுவிட்டதற்குக் கன்ஃபெஷன் -அதாவது பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.

எழுத்தாற்றலோடு வருகிறவர்களைப் படிப்படியாகக் காயடித்துத் துருப்பிடிக்க வைப்பதும் காரியாலயம் தொடங்கியநாளிலிருந்து வருஷத்துக்கு இரண்டு சித்திரக்காரர்களையோ தொழிலாளர்களையோ வேலையிலிருந்து வெளியே தள்ளித்தெருவில் அவர்கள் நிற்பதைப் பார்த்து மகிழ்வதுமாகவே பிழைப்பு நடத்தும் சில பத்திரிகைகள் - தர்மம் - தனிநபர் சுதந்திரம் - பற்றி இன்னும் எழுதி வருகின்றனவே - அதை நினைத்தால்தான் தமிழ் மக்கள் அதாவது இந்தப் பத்திரிகைகள் என்ற பாவங்களை வாங்குகிற தமிழ் மக்கள் எத்தனை பெரிய ஏமாளிகள்.... என்று நினைக்கத் தோன்றுகிறது. தர்மம்,தனிநபர் சுதந்திரம் பற்றிப் பேசுகிற இந்தக் கருப்புப் பணக்குப்பைகளுக்குத் தேசபக்தியும் கிடையாது.தெய்வபக்தியும் உண்மையாகக் கிடையாது. ஆனாலும் பொறுமையாகவோ மறதியாகவோ, அல்லது மந்தமாகவோ தானோ-இவற்றை வாங்கவும், படிக்கவும் செய்கிற தமிழ் மக்களை இன்னும் காண்கிறோம். குமுறுகிறோம். இந்தப் பத்திரிகைகளும் சங்கராச்சாரியாருடைய ஸ்ரீமுகங்களோடு தான் புறப்பட்டு உலாவுகின்றன.

சமீப காலத்தில் எனக்குக் கிடைத்த சில உபதேசங்களை நினைத்துநான்அடிக்கடி சிரித்துக்கொள்கிறேன். முக்கால்வாசி நாள் வெளியூர்களில் கந்தபுராணம் அபிராமி அந்தாதி - சொற்பொழிவுகளில் ஈடுபடுவதும் , மீதமிருக்கும் கால்வாசி நாட்களில் உள்ளுர்-அதாவது - சென்னை நகரத்திலிருக்கும் பிராம்மண விதவைகளுக்குக் கதாகலாட்சேபம் செய்வதுமாயிருக்கிற ஒர் இலக்கிய ஏட்டின் ஆசிரியர், "அவருக்கு அந்த ஆபீசிலே நிறையச் சம்பளம் கொடுத்திண்டிருந்தா...