பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(S5äääæíäF} - 1 13 அவாளுக்கு அடங்கிப் பணிவா விநியமா அவா ஸொல்றதைப் பண்ணி - வேண்டாம் கிறதை விட்டுவிட்டுக் காலத்தைத் தள்ளிண்டிருக்கலாம். வீணாக் கெடுத்துண்டுட்டார். பத்திரிகை வேறே (தீபம்) ஆரம்பிச்சிருக்கா. பாவம்: கையைச் சுட்டுக்கப் போறார். "- என்று எனக்காக அனுதாபப்பட்டதாகக் கேள்விப் படுகிறேன். இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் என்னைப் போல் குமுறாமல், சுதந்திரமாயிராமல் ஆபீசுக்கு அடங்கி விட்டுக் கொடுத்துக் கொண்டு காலந்தள்ளும் அந்தப் 'பெரியவருக்கு நான் தெரிவிக்க விரும்புபவை பின்வருமாறு: 1. நிறையச் சம்பளம் என்ற ஒன்று மட்டும் வாழ்க்கை இலட்சியமில்லை. அதற்கப்பாலும் சில நல்ல தாகங்கள் எனக்கு உண்டு. அடங்குவதும், அவசியமின்றித் தகுதியற்றவர்களுக்குப் பணிவதும், எனக்குப் பிடிக்காதவை. சொல்றதைப் பண்றதும், வேண்டாம்கிறதை விடறதும் சிந்திக்கிறவனால் முடியாத காரியம். அதற்கு அச்சுயந்திரமே போதும். - காலந்தள்ளுவதற்கு - நான் தள்ளாத காலத்தவனில்லை. காலத்தைப் பிடித்துத் தள்ளுகிற இளவயதுக்காரன் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நான் கையைச் சுட்டுக் கொள்ள மாட்டேன். ஆனால் என் கை பலரது தீமைகளை நிச்சயமாகச் சுடும்.