பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திக்கெட்டும் பரவுக தீபச்சுடர் நா. பார்த்தசாரதி தமிழ்ப் பெருமக்களுக்கு இதோ இன்று ஒரு நல்ல செய்தி! குரோதிநீங்கி இன்று விசுவாவசு வருடம் பிறக்கிறது. இந்த்ப் புதிய ஆண்டும் நமது தீபமும் பிரகாசிக்கத் தொடங்கும் முதல்நாள் இது. இந்த நல்லநாளில் என்னைப்பற்றியும் என் முயற்சியைப் பற்றியும் இதோ:உங்களிடம் சில வார்த்தைகள். - பரிசுத்தமான எண்ணங்களுடன் தணியாத சத்திய வேட்கை யுடனும் எல்லா இடங்களிலும் அறிவின் பிரகாசமும் உண்மையின் ஒளியும் துலங்க வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்துடனும் இன்று இந்தத் தமிழ் ஆண்டு தினத்தில் நான் ஓர் இலக்கியத் தீபத்தைப் பக்தி சிரத்தையோடு ஏற்றி வைக்கிறேன். இதன் பிரகாசத்தில், பகைமை, போட்டி, பொறாமை, இலக்கிய மாரீசம், நாட்டைக் கெடுக்கும் நச்சு இலக்கியப் புல்லுருவிகள் - ஆகிய விதவிதமான இருள்களெல்லாம் அகன்று விலகி ஒடுமாக தீபம் நல்லவர்களாகிய எல்லார்க்கும் ஒளியாகவும் தீயவர்களாகிய எல்லார்க்கும் சுடு நெருப்பாகவும் இருக்கும். அப்படித்தான் இருக்கவும் வேண்டும். r நான் இன்று தொடங்கும் இந்தப் பத்திரிகை ஏற்கெனவே என்றுமிருக்கும் எந்தப் பத்திரிகைக்கும் போட்டியோ எதிரியோ அல்ல. எந்தப் பத்திரிகையும் இது வரை சாதிக்காமல் இந்தப் பத்திரிகை இனிமேல் சாதிப்பதற்கென்றே சில துணிவான இலக்கிய முயற்சிகள் இன்னும் மீதமிருக்கின்றன. தீபம் இனி அத்தகைய இலக்கியக் காரியங்களைத் தொடங்கி மேற்கொள் வதற்கு இருக்கிறது. இதனுடைய ஜகஜ்ஜோதியான புதிய பிரகாசத்தினால் எதனுடைய பழைய அழுக்குகளாவது தெரியு மானால் அது அப்படித் தெரிவதில் அழுக்கு இருக்கிறதென்பதைக் குறிக்குமே ஒழிய - இது அந்த அழுக்கைத் தென்படுத்துவதையே நோக்கம்ாகக் கொண்டு பிரகாசிக்கின்றதென்று ஆகாது - இதன் குணம் பிரகாசம் என்பது மட்டும்தான்.இங்கு நமக்கு தேவையானது உண்மை! எனவே அதைமட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் ஒரு புதிய பத்திரிகை தொடங்கு வதிலுள்ள கஷ்டங்களை எல்லாம் நண்பர்கள் எனக்கு நிறைய எடுத்துச் சொன்னார்கள். இது கஷ்டம் நிறைந்ததென்பதாலேயே