பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போது அவரிடம் மலேசிய நண்பர்களுக்கு நான் அனுப்ப இருந்த நன்றிக் கடிதங்கள் சிலவற்றை அவரே கொண்டுபோய் சேர்ப்பதாக வாங்கிச் சென்றார். எதிர்ப்பில் கடுமையிருந்தாலும் இதய மார பழகுவதில் இனிய தன்மை கொண்ட நண்பர் தீபம்’ பார்த்த சாரதியை இழந்துவிட்ட துயரத்தைஅவருடைய குடும்பத் தாருடனும், நண்பர்களுடனும் நானும் பகிர்ந்து கொள்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை அயர்த்தி தீபம் பார்த்த சாரதி குடும்பத்தார்க்கு தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார். .* - 1973 டிசம்பர் திங்களில் பெரியார் அவர்கள் மறைந்து விடுகிறார். 1947 திங்கள் தீபம் ஜனவரி இதழில் இலக்கிய மேடையில் கீழ் கண்ட கேள்வியும், பதிலும் பதிவு செய்யப்பட் டுள்ளது. ---- கேள்வி:- அமரர், ஈ.வெ.ரா.வும் நீங்களும் எப்போதாவது . சந்தித்துள்ளீர்களா ? . பதில் - ஏஇெட்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை துறைமுகப் பகுதியில் நடைபெற்ற ஜீவானந்தம் சிலை திறப்பு விழாவில் இருவரும் ஒரே மேடையில் பேசினோம். அருகே இருந்த பாலதண்டாயுதம் அவர் வந்ததும் என்னை அறிமுகம் செய்து வைத்தார். நான் எழுந்து நின்று அவரை வரவேற்றேன். அவர் அன்போடு விசாரித்தார். "எங்கே வேலை பார்க்கிறீங்க? "என்று கேட்டார். சொந்தமாக பத்திரிகை நடத்த ஆரம்பித்தி ருப்பதாக கூறியதும் அது ரொம்பக்கஷ்டம்ாச்சேஎன்று அனுதாபப்பட்டார். கருத்து வேறுபாடுகள் பல இருந்தும் அந்த பழுத்த பழத்தை நேரில் கண்டபோது அவரிடம் என்னையறியாமலே என்னுள் அன்பும் மரியாதையும் எழுந்தன. நா.பா.வின் படைப்புகளில் குறிஞ்சிமலரில் வருகின்ற கதாபாத்திரங்கள் அரவிந்தன், பூரணி மற்றும் பொன்விலங்கில் வருகின்ற பாரதி, விஜயா என்ற பெண் பாத்திரங்கள் பெயர்கள், அவரது இலக்கிய ரசிகர்களின் வீடுகளில் பிறந்துள்ள பிள்ளை களுக்கு சூட்டப்பட்டுள்ளன. இதில் நா.பா. தன் மூத்த மகளுக்கு பூரணி என்றும் இரண்டாவது மகளுக்கு பாரதி என்றும் பெயர்