பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் k f 15 இதைத்தான் தொடங்க வேண்டுமென்ற தீரனின் ஆசை - இயல்பான ஆசை-நியாயமான ஆசை-எனக்குள் எழுந்தது. இதில் சிரமங்கள் நிறைய இருக்கின்றன என்பதனாலேயே இதை நான் துணிந்து மேற்கொள்ள வேண்டியவனாகிறேன். இந்த வழியில் இலட்சிய வேகமுள்ள பல நல்ல எழுத்தாளர்கள் ஏற்கெனவே தொடர்ந்து சென்று ஒருவர் பின் ஒருவராகத் தோற்றிருக்கிறார்கள் என்பதனாலேயே அவர்கள் சார்பில் அவர்களுடைய தோல்வி களுக்கெல்லாம் வட்டியாக இதில்நான் வெற்றி பெற வேண்டு மென்ற தன்னம்பிக்கை' எனக்கு வந்திருக்கிறது. இந்தத் தன்னம்பிக்கை தான் என்னிடம் நான் வெற்றி பெறுவதற்காக வைத்திருக்கும் வைரம் பாய்ந்த ஆயுதம். து மேடு பள்ளம் நிறைந்த பாதை என்பதாலேயே இதில்நான்துணிந்து நடப்பதற்காக எப்போதும் போல் வலது காலை முன்னெடுத்து வைத்திருக் கிறேன். என்னுடைய இந்த வழியில் இடையூறுகள் நிறைய இருக்கும் என்பதே எனக்குமலையத்தனை தைரியத்தை அளிக்கிறது. நான் இன்று ஏற்றி வைக்கிற இந்தத் தீபம்’ தமிழிலக்கிய உலகில் சகல இருளையும் நீக்கிப் புத்தொளி பரப்ப வேண்டுமென்று எனக்கு கொள்ளை ஆசை-நான் இதை ஏற்றி வைக்கிறேன் என்பதனால் மட்டும் அல்ல; என்னால் ஏற்றப்படுவது எதுவோ அது சத்திய வேட்கை மிக்கதோர் சுடர் என்பதால்தான். இந்த ஞான நெருப்பில் நானோ தீக்குளித்து எழத் துணிந்திருப்ப தற்காகத் தமிழ்த்தாய் நிச்சயம் என் பக்கம் துணை நிற்பாள். தமிழன்பர்களாகியநீங்களும்துணைநிற்பீர்களென்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு. இது வேறு வழி இல்லாத காரணத்தால் இலட்சக் கணக்கில் பணம் முடக்கும் ஒர்காகிதவியாபாரிநடத்த முன்வரும் இச்சை-பச்சை-நிறைந்த கவர்ச்சிப்பத்திரிகை அல்ல.தன்மானமும் நேர்மையுமே இருகரங்களென நம்பும் ஓர் அசல் எழுத்தாளனின் ஆத்மசோதனைதான்இந்தப்பத்திரிகை-இதற்கு நீங்கள்அளிக்கும் ஆதரவு ஓர் நியாயமான எழுத்தாளனுக்கு அளிக்கும் ஆதரவாகும். இதைவிட அதிகமாக இதன் சத்தியத்தை வற்புறுத்த வெறும் வார்த்தைகளை நான் சாட்சிக்கழைக்கத் தயாராயில்லை. முன்பு மலர்ந்து கருகிய எல்லாநல்ல பத்திரிகைகளையும் போல் இதுவும் விரைவில் வாடிக் கருகி நின்று விட வேண்டும்- அல்லது நின்று விடும் - என்று நம்புகிறவர்களுக்கு ஒரு வார்த்தை. இது தோற்று விடும் என்று எவ்வளவு பலமாக நீங்கள் நம்புகிறீர்களோ, அதே போன்று அல்லது அதைவிட அதிகமான பலத்தோடு இது வெற்றி