பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GH3) (எழுத்துஉலகின்நட்சத்தி இாாத்தசாதி) பெற வேண்டுமென்று நான்நம்புவதற்கும் எனக்கு உரிமை உண்டு அல்லவா? பல நல்ல பத்திரிகைகளை ஆதரிக்கத்தவறி தின்று விழுங்கி ஏப்பம் விட்டு நிற்கும் பண்பார்ந்த் தமிழகம் இதையும் அப்படிச் செய்யுமானால் அதற்காக நான் ஏன் வருந்த வேண்டும்? நான் ஏன் வெட்கப்படவேண்டும்? தமிழர்களின் பெருந்தன்மைக்கு இதுவும் ஒரு சோதனை. யார் ஜயிக்கிறார்களென்று பொறுத்திருந்து தான்பார்ப்போமே! ஸ்டீபன்ஸ்பெண்டரும், டி.எஸ். எலியட்டும், தங்கள் தனித்துவத்தோடு மேற்கு நாடுகளில் ஒரோர் இதழ்களை நடத்தியிருக்க முடியுமானால் இங்கும் ஏன் அப்படிப் புதியதுவும் தரமானதுவுமானநல்ல முயற்சிகள் வளரலாகாது? இதற்குத்தமிழ்ப் பெருமக்கள்தான் பொருத்தமும் பயனும் அமைகின்ற வகையில் ஒரு சரியான நல்ல பதிலைச் சொல்லுதல் வேண்டும். நில்லுங்கள்.ஒருநிமிஷம் இறுதியாக இன்னும் ஒருவார்த்தை! இந்த முயற்சிக்காக நான் சேர்த்திருக்கிற மூலதனம் வெறும் பணம் மட்டுமேயல்ல. மனோதர்மமும், தன்னம்பிக்கையுமே எனது பல மான மூலதனங்கள். ஒரு காகித வியாப்ாரி பத்திரிகை தொடங்கும் போது அவர் விற்கும் காகிதத்தைப் போலே மற்றொரு வர்ணக் காகிதமாகிய பணமும் அதிகாரமுமே அதற்கு மூலதனமாகலாம். ஆனால் ஒரு எழுத்தாளன் பத்திரிகை தொடங்கும் போதோ பணத்தைவிட மனோதர்மமே பெரிய மூலதனமாக அமைய முடியும். அப்படித்தான் நானும் அமைத்துக் கொண்டிருக்கிறேன் இப்போது. எனவே தீபத்தின் சந்தாதாரர்களுக்கும் விற்பனை யாளர்களுக்கும், இதுவரை அருகில் நெருங்கிவராத எல்லா விளம்பரதாரர்களுக்கும் இந்த விநாடியில் அன்புடன் ஒரு வேண்டு கோள் விடுக்கிறேன். ஒர் சத்தியமான எழுத்தாளனின் மனோதர்ம முயற்சிக்கு நீங்கள் எப்படி எப்படி எல்லாம் துணை நிற்க முடியுமோ அப்படி அப்படி எல்லாம் தயை செய்து துணை நிற்க வேண்டும். இந்தப் பத்திரிகையின் விலை இப்போது சற்றே அதிகமாகத் தோன்றலாம். எழுத்தாளர்கள் சன்மானவிஷயத்திலும், வேறு பலதுறைகளிலும் இந்தப் பத்திரிகை மேற்கொண்டிருக்கும் உறுதி காரணமாகவும் பொறுப்புக் காரணமாகவும் 75 காசு விலை வைத்தாலே ஓரளவுநஷ்டத்தினைத்தான்.தவிர்க்கமுடியுமே ஒழியச் சிறிது லாபத்தையும் கூட எதிர்பார்த்துச் சிந்திக்க முடியுமென்று தோன்றவில்லை. எதிர் காலத்தில் வேறு வசதிகள் பெருகினால் எங்களுக்கு லாபமில்லாது போனாலும் வாசகர்களுக்கு அதிக