பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூட்டிமகிழ்ந்தார். அதுபோல் மு. வேலாயுதம், தன் மூத்த மகனுக்கு அரவிந்தன் என்றும் தனது ஒரே மகளுக்கு விஜயா என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். கலைஞரின் மகன் திரு.மு.க.ஸ்டாலின், அரவிந்தனாக பாத்திரம் ஏற்று "குறிஞ்சி மலர்' என்ற தொலைக் காட்சி தொடரில் நடித்து தொலைக்காட்சி ரசிகர்களின் அன்பைப் பெற்றார். - 19.8.2003 குமுதம் ஜங்ஷன் வார இதழில் நா. பார்த்தசாரதி மகன்.நா.பா. நாராயணனின் பேட்டி வெளிவந்துள்ளது. அதில் தன் குடும்பத்து செய்தியை நன்கு பதிவு செய்துள்ளார். முன்னாள் முதல்வர்.எம்.ஜி.ஆர்.க்கும்.தனது தந்தைக்கும் ஏற்பட்டநட்பையும் அதன் நிகழ்வுகளையும் விரிவாக எழுதியுள்ளார். இந்த இதழில் தலைவர் கலைஞர், திருமதி எம்.எஸ்., முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம், போன்றோர் பூரணி திருமணத்தை ஆசீர்வதிக்கும் புகைப்படமும் பிரசுரமாகியுள்ளது. . . . . சமீபத்தில் 5.8.2004அன்று திரு. வை.கோ.வின்நடைபயண்ம் நெல்லையில் தொடங்கியசெய்தியை செய்தித் தாளில் பார்த்தபோது, அந்தக் கூட்டத்தில் ஆலடி அருணா பேசும் போது நா.பா.வின் குறிஞ்சிமலர்அரவிந்தன்பாத்திரம் படித்துதான்வை.கோ.விற்கும், தனக்கும் இளமையில் இலட்சிய வேட்கை ஏற்பட்டதாக கூறியிருந்தார். - 15.9.2004ல் வை.கோ.வின் நடைபயணம் முடிந்தபோது தீவுத்திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதிரு. வலம்புரிஜான் தா.பா.வின் குறிஞ்சிமலர் அரவிந்தன் இலட்சிய வாழ்க்கை தான் தனக்கும் திரு.வை.கோ.விற்கும் வலு சேர்த்ததாக பேசிய பேச்சை செய்திகளின் மூலம் அறிந்தேன். டிசம்பர் 2004ல் ஆசிரியர் வீரமணி அவர்கள் பெரியார் மையத்தில் ஆற்றிய உரையில் சாகித்திய அகாடமி பரிசு ஒர் எழுத்தாளர் எப்படி பெற்றார் என்று தீபம் இதழில் நா.பா. எழுதிய கட்டுரையை வாசித்துக் காட்டினார் என்ற செய்தியையும் செய்தித்தாளில் பார்த்தேன். 'தீபம்' நா.பார்த்தசாரதி தான் எழுதிய எழுத்துக்கள் இருக்கின்ற வரையிலும், தீபம் இதழ்கள் தமிழ் பேசும் தமிழ் சமுதாயத்தில் பாதுகாக்கபடுகின்ற வரையில், வருகின்ற தமிழ் இளைஞர்கள் நினைவு படுத்திக் கொண்டே இருப்பார்கள்.