பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமரர் 'நா.பா. சில நினைவுகள் தி.க. சிவசங்கரன் அமரர் நா.பார்த்தசாரதியின் நினைவுகள், நினைக்க நினைக்கத்துயரும், இனிமையும் தருபவை. 18-12-1932 இல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நதிக்குடி என்னும் சிற்றுாரில் பிறந்து 13-12-1987 இல் சென்னை மாநகரில் மறைந்த இந்தத் தமிழ் எழுத்தாளன் வாழ்வும் பணிகளும் ஒரு தனி நூலாக எழுதப் பெற்றால், இன்றையத் தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியப்பகுதிகளை அதில் ஓரளவுகாணமுடியும், 1932இல் ஒரு தமிழ் நாட்டுக் கிராமத்தில் பிறந்த இந்த இளைஞன், வசதியான பொருளாதாரச் சூழ்நிலையைப் பெற்றிருக்கவில்லை. எனினும், மதுரையில், தமிழில், வித்துவான்’ பட்டம் பெற்று, அங்குள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணி யாற்றினார். 1960முதல் 1965வரை கல்கி'யில் உதவி ஆசிரியராக விளங்கினார். பின்னர் 1965 ஏப்ரலில் தமது சொந்த இலக்கிய இதழான 'தீபம்’ மாதப் பத்திரிகையைத் தொடங்கி 1987 நவம்பர் வரை. தமது மேற்பார்வையில் அதை நடத்தி வந்தார். இடையில் சில ஆண்டுகள் (1979 முதல் 1983-84 வரை) தினமணிக் கதிரின் பொறுப்பாசிரியராகவும் விளங்கினார். 1987 டிசம்பர் 13 இல், தமது 55ஆம் வயதில் மறைந்தார். * - - இந்தச் சிறிய குறிப்புகளின் பின்னே, வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்ட ஒரு தமிழ் எழுத்தாளனின், மகாகவி பாரதியின் வழியைப் பின்பற்றிய ஒரு லட்சியவாதியின், நாட்டுப் பற்று, மொழிப் பற்று, இனப் பற்று இவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த ஒரு படைப்பாளியின் வெற்றிக்ளும், தோல்விகளும், நெஞ்சுரமும், வேதனைகளும், கடுமையான உழைப்பும், சாதனைகளும் அடங்கியுள்ளன. - நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழி பெயர்ப்பு முதலிய பல துறைகளில் ஏறத்தாழ 80 நூல்களை வெளியிட்டுள்ள நா.பா. எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியராக மட்டுமின்றி, அருமையான இலக்கியப் பேச்சாளர், சாகித்ய அகாதமியின்தமிழ் மண்டல அமைப்புச்செயலாளர், பொது நல