பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@—{೯@ಡ್ತಿ உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி ) ஊழியர் எனப்பல வகைகளிலும் சுறுசுறுப்பாகப் பணிபுரிந்தார். இலங்கை, மலேசியாவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்துள்ளார். ' குறிஞ்சி மலர் - மூலம் பிரபலமான நா.பா.வுக்கும், எனக்கும் நேரில் நட்புறவு ஏற்பட்டது எப்போது? 1964 டிசம்பர் 14 ஆம் தேதியிலிருந்து 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக நான் சென்னையில் வாழ்ந்த காலத்தில் எங்களிடையே நேர்முக உறவு ஏற்பட்டு, நாள் தோறும், மாதந்தோறும் பல ஆண்டுகள் வளர்ந்தது, வலுப்பெற்றது. அவரது இறுதிக் காலம் வரைமணம் வீசியது. - - & - - 1960 முதல் எனக்கும் நா.பா.வுக்கும் இடையே அவ்வப் போது கடிதத் தொடர்பு இருந்தது. அச்சமயம் நான் நெல்லையில் இருந்தேன். தாமரையில் வந்த என் எழுத்துக்கள் பற்றி அவர் எழுதுவார். தாமரையிலும் பிற ஏடுகளிலும் வந்த அவரது படைப்புக்கள் பற்றி நான் பதில் எழுதுவேன். இப்படியாகக் கடிதத் தொடர்பு மட்டும் இருந்தது. - . 1965 ஜனவரியில் எங்கள் நேரடித் தொடர்பு சென்னையில் ஏற்பட்டது. அப்போது அவர் 'கல்கி'யிலிருந்து, தமது கொள்கைப் போராட்டத்திற்காக வேலை நீக்கம் செய்யப் பெற்ற காலம். புதுமைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வணிக ஏடுகள் பெரிய இடையூறுகள் செய்கின்றன. நச்சு இலக்கியத்தை வளர்ப்பதிலும், நல்ல இலக்கியத்தை எதிர்ப்பதிலும் இவை எவ்வாறு முனைந்து நின்றன. இவை பற்றியெல்லாம் பல நாட்கள் பல மணிநேரம் விவாதித்தோம். எங்களுக்குள் இந்த விஷயத்தில் கருத்து உடன்பாடு ஏற்பட்டது. அப்போது கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு எங்கும் கிளை பரப்பி வந்தது. அதன் அமைப்பாளர்தோழர் ப.ஜீவா அவர்கள் மறைந்து விட்டாலும், பேராசிரியர் நா.வானமாமலை, டாக்டர்'எஸ் ராமகிருஷ்ணன், கே.பாலதண்டாயுதம், ஆர்.கே.கண்ணன், தொ.மு. சி. ரகுநாதன், ஜெயகாந்தன், கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம், குன்றக்குடிஅடிகளார்முதலான பலர் ஒவ்வொரு மாவட்டத்திலும் வீறுடன் பணியாற்றி வந்தனர். பெருமன்றத் தின் சிறப்புக் கூட்டங்களில் நா.பா.வும் பங்கேற்றார். அத்துடன் தாமரையிலும் வல்லிக்கண்ணன், ஆர். சூடாமணி மற்றும் பலரைப் போன்று, சிறுகதைகளும் எழுதி வந்தார். ~.