பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் } - {_5_D 1965இல் தாமரையின் பொறுப்பாசிரியராகப் பணியேற்ற நான் "எனது வேலை நீக்கம்' என்னும் தலைப்பில் தாமரைக்கு ஒரு கட்டுரைத் தொடர்தருமாறும், கல்கி'யில் உதவி ஆசிரியர் என்ற முறையில் அவரது அனுபவங்களை ஒளிவு மறைவின்றி எழுதுமாறும் கேட்டுக் கொண்டேன். நா.பா அதற்கு இசைந்தார். பல மாதங்கள் தாமரையில் அந்தக் கட்டுரைத் தொடர் வந்தது. தமிழ் இலக்கிய உலகில் ஒரு பரபரப்பு ஏற்பட்டதுமின்றி, வணிக ஏடுகளில் பணியாற்றும் உதவி ஆசிரியர்கள் எவ்வாறு கொத்தடிமைகளாக நடத்தப் படுகிறார்கள் என்பதையும், நா.பா.வின் கட்டுரைத் தொடர் அம்பலப்படுத்திற்று. தமது நல உரிமைகளுக்காகப் போராடும் ஒன்றிரண்டு உதவி ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை என்பதையும், அது தெளிவுபடுத்தியது. 'கல்கி'யில் வேலை இழந்த நா.பா. சும்மாயிருக்க விரும்பவில்லை. தி.ஜ.ர. கு. அழகிரிசாமி, அகிலன், வல்லிக் கண்ணன், வெ. சாமிநாத சர்மா மற்றும் பல தேசபக்தர்களையும், லட்சியவாதிகளையும், பிரபல எழுத்தாளர்களையும், கலைஞர் களையும் சந்தித்தார். கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம், சேவற்கொடியோன், சென்னை பாலகிருஷ்ணன், மற்றும் பல இளைஞர்கள் அவருக்குத் துணையாக நின்றனர். 'தீபம் இலக்கியக் குடும்பம் உருவாயிற்று. அக்குடும்பத்தின் ஆதரவுடனும், ஒத்துழைப்புடனும், 1965 ஏப்ரலில் தீபம்’ மாத இதழ் தோன்றியது. நா.பா.ஆசிரியராகவும், அவரது அக்காள் மகன் (மருமகன்) எஸ்.திருமலை உதவி ஆசிரியர் மற்றும் நிர்வாகியாகவும் பணியாற்றினர். - 1965 இல் 'தீபம் தொடங்கியது. 1987 டிசம்பரில் நா.பா. மறைந்த பிறகு, 1988 மார்ச்-ஏப்ரல் வரை 3 இதழ்களைத் திருமலை வெளியிட்ட்ார். அத்துடன் தீபமும் மறைந்தது. எனினும், தனது 23 ஆண்டுக் கால வாழ்வில், புதுமைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், புதிய எழுத்தாளர்கள் பலருக்கு ஆதரவும் ஊக்கமும் அளிப்பதிலும் 'தீபம் கணிசமான சாதனை புரிந்துள்ளது என்பதில் ஐயமில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில், அறுபது, எழுபது, எண்பதுகளில் தீபத்தி ன் சாதனை ஒளிமயமான எழுத்துக்களில் பொறிக்கப்படும் என்பது உறுதி.