பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தீபம் யுகம்' சின்னக்குத்தாசி தந்தை பெரியார் அவர்களால் திருச்சியில் தொடங்கப்பெற்ற பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நான் பயின்று கொண்டிருந்த காலமது. அப்போது-திருச்சியில் இப்போது உள்ள தில்லை நகரை உருவாக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக வழி நெடுகிலும் குவியல் குவியலாக ஆற்று மணல்கொட்டப்பட்டிருந்தது. அன்றைய கால கட்டத்தில்-இலக்கிய உலகில் அகிலனின் கொடி, பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. தென்னுரர் நெடுஞ்சாலையில் - அஞ்சல் நிலையத்துக்கு எதிர்ப்புறத்தில் பட்டாபிராமப் பிள்ளைத் தெருவில் வசித்து வந்தார் அகிலன். ரயில்வேயில் அஞ்சல் துறையில் (R.M.S.) பணி புரிந்து கொண்டிருந்தார்.அவர். மாலை நேரங்களில் - வாரத்தில் ஒரிரு நாளாவது அவரை சந்திப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். அதே தென்னுர் நெடுஞ்சாலையில் இந்தி பிரச்சார சபா அருகேயுள்ள ஒரு கட்டிடத்தில் அறை எடுத்துத் தங்கியிருந்த சீர்காழியைச் சேர்ந்த ரஷீத், சம்பந்தம் ஆகிய இருநண்பர்கள், நான்தங்குவதற்குதங்களது அறையில் இலவசமாக இடம் தந்திருந்தார்கள். அங்கிருந்து அகிலனின் வீடு அதிக தொலைவு இல்லை. அகிலன் விருந்தோம்பலில் தாராள உள்ளம் படைத்தவர். அவரை சந்திக்கச் செல்லும் பெரும் பாலான நாட்களில் எனக்கு மாலைச்சிற்றுண்டியும் வழங்குவார். பின்னர் புதியதாக உருவாகிக் கொண்டிருந்ததில்லைநகர்வளாகத்துக்கு இருவரும் செல்வோம். அங்கு கொட்டிக்கிடந்த மணற்குவியல்களில் ஒன்றைத் தேர்வு செய்து, அதிலமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம். அப்போது முன்னுக்கு வந்து கொண்டிருந்த புதிய எழுத்தாளர்கள் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் நா. பார்த்தசாரதியின் எழுத்துக்களை மிகவும் பாராட்டிப் பேசுவார் அகிலன். நா.பா.வின் கதைகளில் உள்ள வாக்கியங்கள் சிலவற்றை அவர் அப்படியே மனப்பாடம் செய்தவர் போல் ஒப்புவிப்பார். இப்படி சமயம் வாய்க்கும் போதெல்லாம் நா.பா.வைப் பற்றி அகிலன் புகழ்ந்து