பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன் H - { 9 ) பேசும்போதெல்லாம், நா.பா.வை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் உரம் பெற்ற படியே இருந்தது. - 1960களில் நான் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். காலஞ்சென்ற சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் நடத்திய - - - தமிழ்ச்செய்தி என்ற நாளிதழில் பணிபுரிய எனக்குவாய்ப்புக் கிடைத்தது. சிறிது காலத்திற்குள்ளேயே அவரது தனிச் செயலாளராகவும் ஆகிவிட்டேன் நான். அந்தக் காலகட்டத்தில் - கலைஞன் பதிப்பக உரிமையாளர் நண்பர் மாசிலாமணி மூலம் எனக்கு அன்று பிரபலமாக இருந்த தமிழ்வாணன் உள்ளிட்ட பல பெரிய எழுத்தாளர்களின் நட்புக் கிட்டியது.நா.பா.வை சந்திக்கும் வாய்ப்பும் விரைவில் வந்துவிடும். என்று ஆவலோடு அந்த நாளுக்காகக் காத்திருந்தேன்நான். - அந்த நாளும் வந்தது. ஆனால் அது மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இல்லை. வருத்தமே மேலோங்கிய ஓர் சூழ்நிலையில் நா.பா.என்னை வந்து சந்தித்தார். - நா.பா. என்னை வந்து சந்திப்பதற்கு முதல்நாள்-சென்னை அமைந்தகரையில் லட்சுமி தியேட்டர் அருகே ஓர் அஞ்சலிக் கூட்டம். அது காலஞ்சென்ற கல்கி அவர்களின்நினைவாக-கல்கி ஊழியர்களே நடத்திய கூட்டம். அப்போது கல்கியின் துணை ஆசிரியராகப் பணியாற்றி வந்த நா.பா. அவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று விளம்பரப்படுத்தப் பட்டிருந்தது. தமிழ்ச்செய்தி அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு நா.பா. வைக் காணவும் அவரது பேச்சைக் கேட்கவும், அமைந்த கரைக்குச் சென்றேன். கூட்டத்திற்கு ராஜா பாதர் என்னும் கல்கி ஊழியர்-போர்மன் தலைமை வகித்ததாக நினைவு. கூட்டத்தில் பேசிய எல்லோரும் கல்கி'யின் எழுத்தாற்றலை - மனித நேயத்தை அவரது சுதந்திரப் போராட்ட கால தியாகங்களை எல்லாம் போற்றிப் புகழ்ந்தார்கள். அதே சமயம் அவர்கள் எல்லோரும் தங்களது பேச்சின் ஒருகட்டத்தில் 'அமரர்கல்கிக்கு, கல்கி அலுவலக வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் என்று நாங்கள் எல்லோருமே விரும்புகிறோம்,ஆனால் நிர்வாகம் அனுமதிக்க மறுக்கிறது. கல்கி பத்திரிகையை தனது