பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ )எழுத்து உலகின் நட்சத்திரம்'தீபம்' நா. பார்த்தசாரதி( تسس{ tj ; ] எழுத்தாற்றலால் கட்டி வளர்த்த கல்கிக்கு சிலை எழுப்ப முடியவில்லை' என்று கோபம் கொப்பளிக்கப் பேசினார்கள். இறுதியில் பேச வந்த நா.பா.வும் உணர்ச்சி வசப்பட்டார். கல்கி நிர்வாகத்தைக் கண்டித்து, கல்கி சிலை நிறுவ வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார் அவர். அந்தக்கூட்டத்தின் மூலம் எனது நீண்டநாள் ஆசையின் ஒரு பகுதி நிறைவேறியது. இன்னொரு பகுதி நிறைவேறவில்லை. கூட்டம் முடிந்ததும் நா.பா. காரில் ஏறி விரைந்து விட்டார். ஆகவே அவரது சொற்பொழிவைக் கேட்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. ஆனால் அவரை சந்தித்துப் பேசவேண்டும் என்ற ஆசைநிறைவேறவில்லை. - - அமைந்தகரையிலிருந்து நுங்கம்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறும்போதே (தமிழ்ச்செய்தி அலுவலகம்துங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகில் இருந்தது) அடுத்த நாள் பத்திரிகையில் இந்தக் கூட்டச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்! - - மறு நாள் முதல்பக்கம் எட்டு க(ா)லச் செய்தியாக எதை வெளியிடுவது என்று யோசித்தபோது - கல்கி நினைவுநாள் கூட்டமே - முதல் பக்க - முதன்மைச் செய்திக்கு உரியது என்ற எண்ணம் எலுப்பட்டது. கல்கி" க்கு சிலை வைக்க மறுக்கும் கல்கி நிர்வாகத்தின் போக்கிற்கு ஆசிரியர் நா. பார்த்தசாரதி கடுங்கண்டனம் ! என்றரீதியில் தலைப்பிட்டுஅதை ஒரு பெரிய செய்தியாக்கி விட்டேன். 3. - தமிழ்ச் செய்தி - சென்னையில் மாலையில் வெளிவரும் - அதே இதழ் மறுநாள் காலை வெளியூர்களிலும் கிடைக்கும். - செய்தி வெளிவந்த சில மணிநேரங்களுக்குள்-தமிழ்ச்செய்தி அலுவலக டெலிபோன் கிணுகினுத்தது. டெலிபோனை எடுத்து நான் 'தமிழ்ச் செய்தியிலிருந்து தியாக்ராசன் பேசுகிறேன் வணக்கம்” என்றேன்! அந்த