பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன் H {11 } முனையிலிருந்து "நான் பார்த்தசாரதி பேசுகிறேன்; உங்களோடு ஒரு விஷயம் பேச வேண்டும்" என்ற பார்த்தசாரதியின் குரல் படபடத்தது. 'எப்போது வேண்டுமானாலும் ப்ேசலாம். உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தைச் சொல்லுங்கள்; நானே உங்களை கல்கி அலுவலகத்தில் வந்து சந்திக்கிறேன்" என்றேன். வேண்டாம் - நீங்கள் வரவேண்டாம்; நானே வந்து சந்திக்கிறேன் .' என்று சொல்லிவிட்டுப் பேச்சை முடித்துக் கொண்டார்.நா.பா. மறுநாள் மாலைநாலரைமணியளவில் நா.பா. வந்தார். அவர் என்னை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். காரில் ஏறியதுமே, - - - “என்ன இப்படிச் செய்துவிட்டீர்களே" என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேள்வி எழுப்பினார். அந்த முதல் சந்திப்பிலேயே நா.பா.வுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது எனக்கு. ஆனால், * - நான் வெளியிட்ட செய்தியால், அவரது வேலை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏறப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்த போது,நான்மிகவும் வருந்தினேன். சிலகாலம் சென்றபின்நா.பா. மீண்டும் டெலிபோன் செய்தார். கல்கிக்கும் அவருக்குமிருந்த உறவு முடிந்து விட்டது என்ற செய்தியை அவர் சொன்னார். “என்னாலே இப்படி ஆகிவிட்டதற்காக மிகவும் வருந்துகிறேன்; மன்னிக்க வேண்டும்" என்று நான்தழுதழுத்த குரலில் கூறியபோது -அவர் . - 'நீங்கள் பிரசுரித்த செய்தியும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதுமட்டுமே காரணமல்ல; அதற்காக நீங்கள் வருந்த வேண்டாம்" என்றார். {---- " - - அதன்பிறகு நா.பா.வும் நானும் அடிக்கடி சந்தித்துப் பேசினோம். நா.பா. சொந்தத்தில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும்" என்று அவரதுநலனில் அக்கறை கொண்ட நண்பர்கள் பலரும் தெரிவித்த யோசனைபற்றியே பலநாட்கள் பேசினோம். நா.பா. சொந்தத்தில் பத்திரிகை நடத்தும் ஆலோசனையைஏற்றுமாத ஏடு தொடங்கிடமுடிவு செய்துவிட்டார். பத்திரிகையின் பெயர் 'தீபம்” என்று அவர் சொன்னார். முழுக்க முழுக்க கதைகள்,தொடர்கதைகளேர்போடாமல்-இலக்கிய விமர்சனங்கள், முழு அளவிலான பேட்டிகள், மொழிபெயர்ப்புக்கதைகள், புதிய