பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் H. - —CT3) ஒரு காரணம் என்பது அவருக்குத் தெரியும் என்பதால் - ராஜதுரையை தீபத்துக்கு அனுப்பி வைக்க உடனடியாக இசைவளித்தார். ராஜதுரை நா.பா.வின் மறைவு-தீபத்தின் முடிவு வரையில் நா.பா. வோடும், தீபத்தோடும் கடைசி வரையில் இருந்தவர்களில் ஒருவர். . தீபம் முதல் இதழ் வெளிவந்த போது, அது பெரும் பரபரப்பையும் வாசகர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பையும் பெற்றது. - தீபம் தொடங்குவதற்கான ஆரம்பக்கால ஏற்பாடுகளி லிருந்தே-நா.பா.வுக்கு உதவியாக-அவரிடம்-அவரது படைப்பு களிடம் மதிப்பும்-நேசமும் கொண்டஒரு குழு-தீபத்தின் வளர்ச்சி யில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு நா.பா.வுக்கு உறுதுணை யாக இருந்து அவரது முயற்சியை ஊக்கப்படுத்தியது. அவரது உறவினரான திருமலை (இப்போது குமுதத்தில் பணிபுரிகிறார்) தீபத்தின் அஸ்திவாரம் போல் இருந்து நிர்வாகத்தைத் திறம்பட நடத்தினார். இன்று.நக்கீரனில் பணியாற்றும் எஸ். சம்பத், குங்குமச் சிமிழ் பொறுப்பாசிரியர் கெளதம நீலாம்பரன்,தீபம் அலுவலகத்தி லேயே தங்கி தமது இலக்கிய உலகப் பயணத்தைத் தொடங்கிய திருப்பூர்கிருஷ்ணன், ஜீவா தொடங்கிய தாமரையின் வளர்ச்சிக்குக் காரணகர்த்தராக இருந்தவருமான-இன்றும் நல்ல எழுத்துக்களைப் படித்த மாத்திரத்தில் அவைகளைப் படைத்த எழுத்தாளர்களுக் கும் பிரசுரித்த ஏடுகளுக்கும் பாராட்டுக்கடிதம் எழுதி ஊக்குவித்து வருபவருமானதி.க.சி, வல்லிக்கண்ணன்-நா.பா.வின்மற்றொரு உறவினரான அனுமந்தன் பட்டி ஆர்.கோவிந்தராஜன் அவர்களும் நா.பா. மறைந்த பின்னரும் ஆண்டு தோறும் தனது சொந்தச் செலவில் - நா.பா. நினைவு தினக்கூட்டம் நடத்தி வருபவரும் - தீபம் யுகம் என்ற பெயரில்நா.பா.வின்தீபம் இதழ்த் தொகுப்புகளின் அடிப்படையில் - நா.பா. வையும் தீபத்தையும் நினைவு படுத்தும் வகையில்வல்லிக்கண்ணன்.அவர்கள்மூலம் புத்தகம் வெளியிட்ட வருமான அ.நா.பாலகிருஷ்ணன், உப்பிலி சீனிவாசன், கே.வி.கிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், டி.பி.எஸ். தண்டபாணி, ஆரம்பகாலதீபம் இதழ்களை அச்சிட்டு உதவிய ஆர்.நடராஜ ஐயர் மெட்ரோ பாலிட்டன் பிரஸ் உரிமையாளர் என்று நா.பா.வின் தீபம் அலுவலகத்தில் எப்போதும் இலக்கிய ஆர்வலர்கள் குழு