பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன் | – #ड़) தியானம்-தவம் "தியானங்கறது என்ன? மனசை ஒருமுகப் படுத்துகிறது தானே? ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி- மனசை அடக்குகிற அப்படிபட்ட தியானம் எந்தச் செயலிலும் இருக்கக் கூடிய முழு ஈடுபாட்டின் வெளிப்பாடுதானே எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அக்கம் பக்கத்து ஈர்ப்புகளால் கவரப் படாமல், மனதைச் சிதறவிடாமல் அந்த வேலையை முழுமையாக, திருப்தியாக முடிக்க முயற்சிக்கிறோமே, அதுதான் தியானம். தியானம் என்பது வெறும் ஆன்மீக உணர்வல்ல, அது எல்லாச் செயல்களிலும் இருக்க வேண்டிய நிறைவாக அச்செயல்களை முடிக்கவல்ல உந்துதல்தான்' என்பார் அப்பா. அப்படி ஒரு தியானத்தை ஒவ்வொரு செயலிலும் மேற்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் தனியாகக் கண்களை மூடிக் கொண்டு அமரும் பயிற்சியாக மேற்கொள்ளவேண்டிய அவசியம் இருக்க்ாது என்பது அப்பாவின் கருத்து" - என்கிறார் மகன்நாராயணன். - அப்பா எப்போது எழுதுவார்? எப்படி எழுதுவார் என்பது பற்றி மகன் நாராயணன் கூறியிருக்கிறார். அப்பா நா.பா.வோ. - எப்படி முதன் முதலில் எழுத ஆரம்பித்தேன்? வாழ்நாள் முழுவதிலும் எழுதும் போது கடைப்பிடித்த முக்கியமான நெறிமுறை என்ன என்பதை - இளைய தலைமுறையினருக்கும் வழிகாட்டும் வகையில் குறிப்பிட்டிருக்கிறார். 'நான் முதல் கதை, கவிதையை எழுதியதால் எனக்கு ஏற்பட்ட இன்பத்தை, வேதனையை இரண்டையும் நினைத்து மகிழ மட்டுமல்ல, வருந்தவும் நானே உரியவன். முதல் குழந்தையைப் பெற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சி, பிள்ளைப்பேற்று வலி, இரண்டையுமே தாய்தான் உணர முடியும். கணவனே உணரமுடியாதென்றால் அதற்கு மேல் என்ன சொல்வது? அனுபவத்தின் கர்த்தாவே அந்த அனுபவத்திற்குத் தாய். என் முதல் கதையை, கவிதையை எழுதும்போது என்னுடைய மன நிலை என்ன? உண்மையைச் சொல்லி விடுகிறேன். வீறாப்புப் பேசவோ வெட்கப் படவோ எனக்கு விருப்பமில்லை. பிள்ளைப்பேற்றை எண்ணி இளம்பெண்ணுக்கு ஏற்படுமே பயங்கலந்த மகிழ்ச்சி, அதுதான் அப்பொழுது என் நிலை. பயந்து கெர்ண்டே எழுதினேன். என்னிடம் ஏதாவது திறமை இருக்கிறதென்று தமிழ் வாசகர்கள் கருதுவார்களானால்