பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* o f தீபம் காட்டிய வழி ! ஆரணி எஸ் சம்பத் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு - முடித்துவிட்டு என்ப தற்கு முடிக்க முடியாமல் விட்டுவிட்டு என்றும் பொருள் கொள்ளலாம் - தாய் வீடு இருக்கும் ஆரணியில் அரைக்கால் சட்டையுடன் சுற்றிக் கொண்டிருந்தவன் மேல், எப்படித்தான் தாக்கத்தை ஏற்படுத்தினார்களோ அரவிந்தனும் பூரணியும் ! ஏற்கனவே எழுத்தாளர் மாயாவி,ஜெயகாந்தன் போன்றோரின் கதைகளில் மனம் லயித்திருந்த இளைஞனை தன் பேனா விரல்களால் சுண்டியிழுத்திருந்தார் 'தீபம்' நா.பார்த்தசாரதி. 'குறிஞ்சி மலர்த் தோட்டத்தில் உலவியவர்கள் வெறும் கதை மாந்தர்களல்ல; உயிரோட்டமுள்ள இதயங்கள். எந்த வேலையும் தெரியாமல் இருக்கிறானே என அக்கம் பக்கத்தாரால் அனுதாபத்தோடு பார்க்கப்பட்டு வந்த இளைஞனை அரவிந்தனும் பூரணியும்தான் சென்னை நோக்கி தள்ளினார்கள். பட்டணத்திற்கு வந்தபோது இன்ன வேலை தெரியும் என்று தைரியமாக அந்த அரைக்கால் சட்டை இளைஞனால் சொல்லிக் கொள்ளமுடியாது. படிப்பும் குறைவு, கையிருப்புமாக இருந்தது தன்னம்பிக்கைதான். 1965ம் ஆண்டு 'தீபம்'சுடர்விடத் தொடங்கியிருந்தது. தன்னை வசீகரித்த எழுத்தாளரைப் பார்த்துவிட்டு வரலாம் என ஒரு மதியப் பொழுதில் அந்த அலுவலகத்திற்கு சென்றான் இளைஞன். அரைக்கால் சட்டையுடன் அவன் இருந்தபோதும் நா.பா.வின் அன்புக்கரங்கள் நீண்டு வரவேற்றன. பெயரையும் ஊரையும் கேட்டவர், "என்ன பண்ணுறீங்க?" எனறாா. * வேலை தேடிக்கிட்டிருக்கேன்-இளைஞன்நம்பிக்கையோடு சொன்னான். - . . . . "என்ன வேலை தேடுறீங்க?" 'பத்திரிகையில்தான் வேலை தேடணும்'. ‘'எதுக்கு தேடுறீங்க? இங்கேயே வேலை பாருங்க" என்றவர், மேலாளர் திருமலையின் பக்கம் திரும்பி 'உதவிக்கு