பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம்'தீபம்' நா.பார்த்தசாரதி D பசிக்கு விருந்தளித்தார். மூத்த பத்திரிகையாளரும் திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகமாகவும் விளங்குகிற சின்னக்குத்தூசி தியாகராஜனும் அவரது எழுத்தும் இளைஞனை வசீகரித்தன. சின்னக்குத்தூசி தியாகராஜனின் இயல்பாக பழகும் தன்மையில் அவரும் கவர்ந்திழுக்கப்பட்ட்தில் ஆச்சரியமில்லை. தீபம் தந்த பயிற்சியும், சின்னக்குத்தூசி தியாகராஜனுடன் கிடைத்த பரிச்சயமும் அந்த இளைஞனுக்கு இரண்டு கால்களாக மாறி, வாழ்க்கையின் பயணப் பாதையில் நடப்பதற்கு உதவின. பத்திரிகையுலக பீஷ்மர் சாவியிடம் பணியாற்ற தகுதி மட்டுமல்ல, தைரியமும் வேண்டும் இளைஞன் நடுத்தர வயதை அடைந்திருந்த போது, சாவியிடம் பணிக்கு சேர்ந்து, அவரது மதிப்பைப் பெற்றான். இன்று, அவனை முதுமை போர்த்தி யிருக்கிறது. தலைமுடி நரை பூசியிருக்கிறது. 57 வயதில் நக்கீரனில் பிழை திருத்துநராக இருக்கும் அவன், இன்றைக்கும் பத்திரிகைத்துறை சார்ந்தே வாழ்வதற்கான வழியைத் திறந்துவிட்டது தீபம்தான். - & . அந்த தீபத்தின் பெருமைக்குரிய வாசகர்களில் ஒருவரான அ.நா.பாலகிருஷ்ணன், தீப நினைவொளியை மறக்காமல் விழா எடுப்பதும், புத்தகங்கள் வெளியிடுவதும் ஆச்சரியமான தொண்டாகவே தெரிகிறது. நா.பா.வுக்கு விழா எடுக்கும் அ.நா.பா. எனும் விசுவாச வாசகனின் தயவால், தீபத்தின் நினைவு வெளிச்சம் இன்னும் அணையாமல் காக்கப்படுவதைக் கண்டு நெகிழ்கிறான் வயதாகிவிட்ட அந்த இளைஞன், ஆரணி சமபத.