பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. வளர்த்த இலட்சிய 'தீபம்' வல்லிக்கண்ணன் - தீபம் இலக்கிய இதழைநா. பார்த்தசாரதி1965 ஏப்ரல் மாதம் -சித்திரை வருடப் பிறப்பு அன்று-துவக்கிவைத்தார். 1987 டிசம்பரில் நா.பா. அமரரானார். - நா.பா. வின் மறைவுக்குப் பிறகு, 1988 ல் எஸ். திருமலை தீபம் மூன்று இதழ்க்ளை வெளியிட்டார். பிறகு காலத்தின் கட்டாயத்தால் தீபம்' நின்று விட நேரிட்டது. - ஆக, 23 வருடங்கள் 'தீபம்' நா.பார்த்தசாரதியால் வளர்க்கப்பட்டது. இலக்கிய உலகத்தில் அது தனியான தொரு இடத்தைப் பெற முடிந்தது. தனது சாதனைகளால், தீபம் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பது வரலாறு. - - தன்னம்பிக்கை, இலட்சிய வேகம், செய்ல் முனைப்பு, புதிதாக சாதனைகள் புரிய வேண்டும் என்ற வேட்கை, நம்மால் அவற்றை செய்ய முடியும் எனும் மன உறுதி, நாம் சாதிப்பதற்காக பல காரியங்கள் காத்திருக்கின்றன என்ற எண்ணம் முதலிய பண்புகளைக் கொண்ட இலக்கியவாதி, போதிய பண பலம் இல்லாது, பத்திரிகை தொடங்கி, பெரும் சிரமங்களுடன் நடத்தி, வைராக்கியத்துடன் அதை வளர்க்க முற்படும் போது, திறமை யாளர்கள் பலரது துணையும் ஒத்துழைப்பும் அவருக்குக் கிடைக்கின்றன. அந்தப் பத்திரிகை வெற்றிகரம்ாக சாதனைகள் புரிந்து, வரலாற்றில் இடம்பெறுவது சாத்தியமாகிறது. தீபம் விஷயத்திலும் அதுதான்நிகழ்ந்தது. 'எந்தப் பத்திரிகையும் இதுவரை சாதிக்காமல், இனிமேல் சாதிப்பதற் கென்றே சில துணிவான இலக்கிய முயற்சிகள் இன்னும் மீதமிருக்கின்றன. ஒரு புதிய பத்திரிகை அத்தகைய காரியங்களைத் தொடங்கி மேற்கொள்ள இடம் இருக்கிறது என்று நா.பா. நம்பினார். எனவே, பரிசுத்தமான எண்ணங்களுடன் தணியாத சத்திய வேட்கையுடனும், எல்லா இடங்களிலும் அறிவின் பிரகாசமும் உண்மையின் ஒளியும் துலங்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தோடு அவர் தீபம் இதழைத் தொடங்கினார். s:- .