பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன் , - - (27) எழுத்தாளர்களின் ஒத்துழைப்பும் இவ்வகையில் தீபம் இதழுக்கு வெற்றி கிட்டச் செய்தன. ஆகவே, தீபம் என்பது ஒருதம்பிக்கை. பிறகு பத்திரிகையும் கூட. தீபம் என்பது ஒர் இலக்கு. பிறகு இலக்கியம். தீபம் என்பது ஒர் இலக்கிய இயக்கம். பிறகு தான் பத்திரிக்கை' என்று பெருமிதத்தோடு அறிவித்தார் நா.பா. இவ்விதம் 23 வருடங்கள் நா. பார்த்தசாரதியால் தீபம் வளர்க்கப்பட்டது. - . . வெகுஜனப் பத்திரிகைகளுக்கிடையே இலக்கிய தாகம் கொண்டவர்களின் வேட்கையை தணிக்கக்கூடிய ஒற்றை ஊற்றாக இருந்ததுதீபம். - 1965 ஏப்ரல் முதல் 1988 மே மாதம் வரை, 239 இதழ்கள் பிரசுரம் பெற்ற தீபம் ஒவ்வொரு மாதமும் அதன் தரத்தைக் காப்பாற்றி வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல புதிய அம்சங்களை வெளியிடுவதில் சிரத்தை காட்டியது. இலக்கிய விஷயங்களுடன் சமூகப் பிரச்சனைகளிலும் நாட்டின் நலனிலும் அக்கறை கொண்டு, தகுந்த விஷயங்களை வெளியிட்டது. சிறப்பான சிறுகதைகள், அருமையான ருறு நாவல்கள் புதுமை செறிந்த தொடர் கதைகள், மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் என்று இலக்கிய வடிவங்கள் பலவற்றிலும் நயமும் சுவையும் தரமும் நிறைந்தபடைப்புகளை தொடர்ந்து வெளியிட்டது. ஆழ்ந்த கனமான சிந்தனைக் கட்டுரைகளையும், இலக்கியப் பிரச்சனைகள் சம்பந்தமான சர்ச்சைகளையும் பிரசுரித்தது. புத்தக மதிப்புரைக்கு கணிசமான பக்கங்களை ஒதுக்கியது. அனைத்தினும் மேலாக, இலக்கிய வரலாற்றுரீதியான பல தொடர் கட்டுரைகளை (மணிக் கொடி காலம், சரஸ்வதி காலம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை முதலியன) வெளியிட்டுதனிக் கவனிப்பு பெற்றது. - . - நேர்காணல் முறையில் பிரபல இலக்கிய ஆசிரியர்களின் கருத்துக்களையும், தொழிலதிபர்களின் அனுபவங்களையும் எண்ணங்களையும் பிரசுரித்தது. குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களின் அனுபவங்களையும் குறிக்கோள்களையும் நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் வெளியிட்டது.