பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசப்படுகிறார் பேச்சாளர்.நா.பா... திருப்பூர் கிருஷ்ணன் எழுத்தாளர் என்ற வகையில் குறிஞ்சி மலர் நா.பா.வைப் பொதுவாகத் தமிழ் வாசகர்கள் எல்லோருக்கும் தெரியும். இப்போதும் விரும்பினால் அப்படித் தெரியாதவர்கள் அவரைத் தெரிந்துகொள்ள முடியும். அவரது பொன்விலங்கு, சத்திய வெள்ளம், நெஞ்சக்கனல், ஆத்மாவின்ராகங்கள், நீல நயனங்கள் போன்ற சமூக நாவல்களும் மணிபல்லவம், ராணிமங்கம்மாள், நித்திலவல்லி, பாண்டிமாதேவி போன்ற சரித்திர நாவல்களும், சமுதாய உணர்வு நிறைந்த மணிமணியான சிறுகதைகளும் நிரந்தரஇாய்த் தமிழ் மொழியை அலங்கரித்துக் கொண்டிருக் கின்றன. அவர் தீபத்தில் எழுதிய கேள்வி பதில்கள் கூடகமலம் சங்கர் என்பவரால் தொகுக்கப்பட்டுப்புத்தகமாகவந்துவிட்டன. எழுத்தாளர் என்ற வகையில் அவரைக் கணிப்பதுபோல் பேச்சாளர் என்ற வகையில் அவரைஎப்படிக்கணிப்பது? அவரது பேச்சு இப்போது கேட்கக் கிடைப்பதில்லை. அகில இந்திய வானொலியில் சில ஒலிப்பேழைகள் வைக்கப்பட்டிருக்கலாம். அவரது நண்பர்கள் யாரேனும் தங்கள் இல்லங்களில் சில ஒலிப்பதிவுகளை வைத்துக் கொண்டிருக்கலாம். மற்றபடிகீரன், வாரியார் போன்ற சமயப் பேச்சாளர்களின் ஒலிப்பேழைகள் வாங்கக் கிடைப்பது போல நா.பா. சொற்பொழிவு பதிவு செய்யப்பட்டஒலிப்பேழைகளாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. தமிழ்மொழியின் அண்மைக்கால உன்னதமான பேச்சாளர்களை வரிசைப் படுத்தினால் முதல் ஐந்து பேரில் ஒருவராக இருப்பார் நா.பா. அவரது சமகாலத்தில் ஜீவா, கி.வா.ஜகந்நாதன், டாக்டர். எஸ்.ராமகிருஷ்ணன், பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் மிகச் சிறந்த பேச்சாளர்களாகப் புகழ்பெற்றிருந்தார்கள். பொதுவுடமை சார்ந்த பேச்சுகள், சமயம் சார்ந்த பேச்சுகள், பட்டிமன்றப் பேச்சுகள், அரசியல் பேச்சுகள் போன்ற பலவகைப்பட்டபேச்சுகள் இப்போதிருப்பதுபோலவே அப்போதும் இருக்கத் தான் செய்தன. ஆனால் பட்டிமன்றப் பேச்சின் தரமும் இன்றுள்ளதைப் போன்று மிக மலினமாக அன்று இருந்ததில்லை. . . . . . . .