பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பா. என்கிற நல்ல மனிதர் சுப்ர. பாலன் "சுப்ர பாலன்!” என்று கீழேயிருந்தே குரல் கேட்கும். அடுத்த விநாடியே என்கிற மாதிரி என் மாடிக்குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வந்து சிரித்துக் கொண்டே நிற்பார். இரண்டிரண்டு படிகளாய்த்தாவி ஏறிவருகிற வேகம்...! . 'புறப்படுங்கள் பால்யூவைப் பார்க்கணும். சீக்கிரம்." என்பார். என் தாயோ, மனைவியோ இவருடைய குரல் கேட்டதுமே அரைதம்ளர் டீயோ, காபியோகலந்து எடுத்துவந்து தருவார்கள். அதுதான்.அவருடையஅளவு என்பதுஅவர்களுக்குத் தெரியும். கூடவே ஒரு தம்ளர்தண்ணிரும் வேண்டும். காபியோ, தேநீரோ பருகினால் உடனே வாய் கொப்பளித்தாக வேண்டும். பற்களைப் பாதுகாப்பதில் அத்தனை சிரத்தை. எல்லாவற்றிலும் வேகம், வேகம். வேகம் தான் அவருடைய வாழ்க்கை முறையாக இருந்தது. நா.பா. வந்து அழைக்கிற நேரம் காலை ஏழு மணி அளவில் இருக்கும். சில நாட்களில் குளித்துக்கூட இருக்கமாட்டேன். உடனே அவருடன் புறப்பட்டாக வேண்டும். - - பால்யூவோ, செளரியோ, ஜெயகாந்தனோ - நான் குடியிருந்த கலைஞர் கருணாநிதி நகர் வட்டாரத்தில் இருந்த நண்பர்களைப் போய்ச் சந்திக்கிற போது தான் இப்படி. இல்லாவிட்டால் வேறு இடங்களுக்குப் போவதாயிருந்தால் முதல் நாளே சொல்லி விடுவார். 'சுப்ர. பாலன் சாயங்காலம் மைலாப்பூர்வர்ரிங்களா? - + எனக்கு அப்போது கல்லூரிச் சாலை அலுவலகத்தில் வேலை. திருவல்லிக்கேணியில், நல்ல தம்பிச் செட்டித் தெருவில் 'தீபம் அலுவலகம் இருந்தது. சமயங்களில் என் அலுவலகம் முடிகிற நேரத்தில் முன்கூட்டியே சொல்லிவிட்டு, சாலையோரத்தில் காரைநிறுத்தி விட்டுக் காத்திருப்பார். நேரம் பிசகாமல் நான் போய் விடுவேன். - - காரை அவரேதான் ஒட்டுவார். ' தினமணி'யில் வேலை பார்த்த காலங்களில் கூட ஒட்டுநர் வைத்துக் கொண்டதில்லை.