பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாபாவின் கதை தீபம் எஸ். திருமலை - சிறுகதை, நாவல் என எழுத்துலகில் நிறைய நூல்கள் எழுதி சாதனை புரிந்தவர் நா.பா. அவரே தன் கதையை எழுத ஆரம்பித்து முதல் அத்தியாயமே கடைசி அத்தியாயமாக முடிந்து விட்டது. . . . . 1956 முதல் 1987 மறைவு வரை அவருடன் இருந்தவன்- என்பதே அவரைப்பற்றி எழுத எனக்கு உள்ள ஒரே தகுதி. நா.பா.என்.மாமன்மகன் என்றாலும், அவர்ஊர்நதிக்குடி என்பதாலும் என் ஊர் வடக்காண் மறைநாடு என்பதாலும் 1956 வரைஅதிகம் சந்தித்துப்பழகியநினைவு இல்லை. மதுரையில் 1953 1954ல் மூன்றாவதோ நான்காவதோபடித்த போது என்மாமாவைப் பார்க்க வீரராகவப் பெருமாள் கோயில் சென்ற நேரங்களில் நாபாவை குடுமியுடன் கோயில் நந்தவனத்தில் பூப்பறித்துக் கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்து கொண்டிருக்கும் நிலையில் பார்த்துள்ளேன். அவரும் என்னிடம் பேசவில்லை, நானும் பேசவில்லை. பின்னர் ஒரு முறை கூடலழகர் பெருமாள் கோவில்தெருவில் ஒரு ராமானுஜ கூடத்தில் தங்கிப்படித்த போது சாப்பாடு கொண்டு போய் கொடுத்த நினைவு மட்டும் இருக்கிறது. படிக்கும் நாளிலேயே நடத்திய கல்கத்தா தமிழ் சங்கம் பாரதியார்பற்றிய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசாகதங்கப் பதக்கம் பெற்றார். அந்தபதக்கத்தை அவர்பெற்றோர் எவ்வளவு பெறும் என கணக்கு போட்டுக் கொண்டிருந்தை பார்த்தேன். அவர்கள் குடும்ப வறுமையில் அந்த தங்கப் பதக்கம் விலைபோய்விட்டது. - - 1955ல் என்சகோதரி திருமணத்திற்கு என்மாமிவந்திருந்தார். நான் அப்போது E.S.I.C.(8ம் வகுப்பு) படித்து வந்தேன். மேற்கொண்டு அங்கு படிக்க பள்ளி வசதில்லை என்ற தகவலை என் தாய் என் மாமியிடம் சொல்லியிருப்பார்கள்போலும். என் தாய்க்கு நாபாவிடமிருந்து ஒரு கார்டு வந்தது. பென்சிலால் எழுதப்பட்டிருந்தது. திருமலையை நான் படிக்க வைக்கிறேன். இத்தனாம் தேதி பள்ளி திறக்கிறார்கள் என்று கடிதம் வந்தது. நான் படித்த பள்ளியில் என்ஆசிரியர்களிடம் நாபா என் உறவினர் என்று