பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(44) எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி) சொல்லி கல்கியில் வந்த வலம்புரிச்சங்கு கதையைக் காட்டியிருக்கிறேன். எனவே நாபாகார்டை பள்ளி ஆசிரியரிடமும் காட்டினேன். பெரிய எழுத்தாளர் என்கிறாய் பென்சிலில் கடிதம் எழுதியிருக்கிறாரே என்று கேட்டது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது பென்சிலில் எழுதுவது என்பது சாதாரணம். பேனா என்பது சற்று காஸ்ட்லியாக கருதப்பட்டது. நாங்கள் பள்ளியில் எட்டாவது வரை பென்சில் உபயோகித்ததாகத்தான் நினைவு. உடன் என் அம்மாவுடன் ஒரு பெட்டியில் மாற்று உடையாக இன்னொரு டிராயர் சட்டையுடன் புறப்பட்டு விட்டேன். முதலில் நாபாவின் ஊரான நதிக்குடி சென்று எனது இன்னொரு மாமாவான (நாபாவின் சித்தப்பா) ராஜா அய்யங்காரிடம் ஆசிபெற்று பள்ளியில் சேர்க்க விரும்பினார் என் தாயார். இவன் படித்து என்ன செய்ய போகிறான்? கலெக்டர் வேலைக்கா போகப்போகிறான்? எதற்கு வீண் செலவு என்றுதான் அவர் ஆசி வழங்கினார்.அவர்காலம்.அப்படி அவரே படிக்காதவர் தான். விவசாயம்தான் தொழில். என் மூன்று மாமாக்களுமே பள்ளி சென்று படிக்காதவர்கள்தான். ஆனால் எழுதப்படிக்கத் தெரியும். பூரீரங்கம், அழகர் கோவில்களில் கோவில் மடைப் பள்ளியில் பணிபுரிந்திருக்கிறார்கள். மூன்று மாமாக்களும் காரைக்குடி தேவகோட்டையில் ஹோட்டலும் நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்திற்கு மாட பூசிலான் என்ற பெயர் உண்டு. அதுபற்றிநாபாவின் அண்ணன்றுரீநிவாசன் அவர்களிடம் (ஒய்வு பெற்ற தமிழாசிரியர்) கேட்ட போது மாடபூசி என்பது காஞ்சிபுரம் அருகில் உள்ள கிராமம். அங்கிருந்து ஒரு காலத்தில் பாண்டிய நாட்டிற்கு ராணி மங்கம்மாள் காலத்தில் நதிக்குடிக்கு குடிபெயர்ந்தாகக் கூறுகிறார். . - . ஒவியர் மதன்கூடதன்னைமாடபூசி பரம்பரை என்று எழுதியுள்ளதாக நினைவு. அதனால்தான் நாபாவின் தந்தை தன் பெயரை M.S. நாராயண அய்யங்கார் என்று தான் கையெழுத்திடுவார். எம் என்பது மாடபூசி என்ற குடும்பப் பெயரின் இன்ஷியல். ஆனால் நாபா வோ அந்த எம் சேர்த்துக் கொள்ளவில்லை. அப்படி ஒரு வேளைசேர்த்துக் கொண்டிருந்தால் M.N.பார்த்தசாரதியாக இருந்திருப்பார். ...