பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை "சுவடில்லாத பாதையிலே தனிவழி அம்ைத்துக் கொண்டு போகச் செய்யப்படுகிற முயற்சி எதுவும் முயற்சியாக முக்கியமானதுதான். இந்த முயற்சிகளில்தான் பிற்காலத்தில் இலக்கிய சிகரங்கள் எட்டுவது சாத்தியமாகிறது.” - க.நா.சு. "தீபத்தில் வெளியாகும் கதை, கட்டுரைகளில் வரும். பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. ஆனால் அதே சமயத்தில் அவை, அவற்றைப் படைத்த இலக்கியச் சிற்பிகளின் பொறுப்பு என்கிற கம்பீரமான பலத்தைச்சார்ந்துநிற்பவையாகும். * நா. பார்த்தசாரதி பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கல்கியில், என்னுடைய பொன் விலங்கு தொடர்கதை வெளிவந்து கொண்டிருந்தபோது சென்னை கோ- ஆப்டெக்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் ஆர்வத்தோடு என்னைச் சந்திக்க வந்தனர். என் எழுத்துக்களில் ஆர்வமும் நேசமும் காட்டினர். தொடர்ந்து பழகினர். * * அவர்கள் திருவாளர்கள் அ.நா. பாலகிருஷ்ணனும், மீரான் பண்ணையாரும் ஆவார்கள்.திருநெல்வேலி மாவட்டத்தைசார்ந்த மீரான்பண்ணையாரும், காஞ்சிபுரத்தைச்சேர்ந்த பாலகிருஷ்ணனும் இரட்டையர் போல் நெருக்கமான பழக்கமுடையவர்கள். நட்பும் அன்புறவும் நிறைந்தவர்கள். இருவரும் தீபம் தொடங்கிய நாளிலிருந்து ஏன் அதற்கு முன்பேயும் என்மேலும் என்முயற்சிகளின் மேலும் நம்பிக்கையும், நல்லெண்ணமும் ஆவலும் உள்ளவர்கள். தீபத்துக்காக தங்களால் முடிந்த பணிகளை அவ்வப்போது ஆற்றுவார்கள். தீபம் தொடங்கியபின்தமிழ் இலக்கிய இரசிகர்களின் நடுவே மலர்ந்த முகங்கள் அதிகமாயின. அதில் இந்த இருமுகங்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். இந்த இரட்டையர்களின் மனத்தில் சினிமா, சொற்பொழிவு, விலைவாசி, சம்பளநாள் இவற்றைப் போல் இவற்றையும் விட அதிகமாகக் கூட தீபம்’ என்கிற பத்திரிகையும் நினைவிருக்கும். இவர்களால் மறக்க முடியாத விஷயங்களில்-இவர்களின் அக்கறையும் சிரத்தையையும் பெற்ற விஷயங்களில்தீபம் என்னும் இதழ் முக்கியமானதாயிருக்கும்'