பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம்'தீபம்' நா.பார்த்தசாரதி ) வாங்கி சென்று வந்திருக்கிறார். அப்போது பல இடங்களில் சொற்பொழிவாற்றித் திரும்பினார். அடுத்த இருமுறை இலங்கை சென்றது பாஸ்போர்ட்விசாவில் விமானப்பயணத்தில்தான். முதல் முறை நாபா சென்ற போது உடன் சென்றவர் மாயூரத்தைச் சேர்ந்த கா. சிங்காரவேலன். அவருடன் கதிர்காமத்தை தரிசிக்க வேண்டும் என்று அவர்தாயாரும் சென்றிருந்தார். அப்போது புகைப்படத்தைக் காண்பித்து அவர் சொன்னதகவல் இது. - எப்போதும் கதராடைதான். ஆனால் பஞ்சகச்ச வேஷ்டி தோளில்துண்டு. ரோட்டில் நடந்து சென்றால் எல்லோரையும் ஒரு நிமிடம் நின்று பார்க்கத்துண்டும்உருவம். வீட்டின்பின்புறம்தான் பள்ளி. ஆனால் ஒரு நாளும் பின்புற வழியாகச் செல்ல மாட்டார். ஆனால் நான் தினமும் பள்ளிக்கு பின்பக்க வழியாகத்தான் செல்வேன். அது ஆண் பெண் சேர்ந்து பழகிடும் பள்ளி. அவரது மாணவ மாணவியரோ அவரது எழுத்தின் ரசிகர்களாகவும் விளங்கினார்கள். ஆனால் சக ஆசிரியர்கள் அவர் எழுத்தைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பார்வையில் தமிழாசிரியர்கள் என்றால் சற்று மட்டம் தான். ஹரிஹர சுப்பிரமணியம் என்ற ஆசிரியர் மட்டும் நாபாவின் ரசிகராக விளங்கினார். பட்டாபி நாராயணன் என்ற ஆசிரியர் கதை எழுதுவது பெரிய விஷயமாநான்கூட எழுதுவேன் என்று சொல்லி விட்டு ஒரு கதை எழுதி கல்கியில் பரிசும் வாங்கி பின் எழுதுவதை நிறுத்திவிட்டார். அப்போது அவரது சம்பளமே ரூ.56 தான். அப்போது ஆசிரியர்களின் சம்பளம் மிகமிக குறைவாகத்தான் இருந்தது. ஏற்கனவே அவர் குடும்பத்தில் அவர் உட்பட நான்கு பேர்கள். நானும் ஐந்தாவது நபராகச் சேர்ந்து கொண்டேன். வீட்டு வாடகை 5 ரூபாய்தான். எழுத்தின் மூலம் வரும் வரும்படிதான் குடும்பத்தை கஷ்டமில்லாமல் நடத்த உதவியது என்பது உண்மை. வீரகேசரியில் வாரம்பத்து ரூபாய் என்றாலும் நான்கு வாரங்களுக்கு ரூ.40/- மணியார்டர் வந்து விடும். வீடு இருக்கும் அதே தெருவில்தான் அஞ்சலகம். போஸ்ட்மேன் வீட்டுக்கு வரும் வரை ப்ொறுக்கமாட்டார். அதற்குமுன்பு என்னைதபால்நிலையத்திற்கு லெட்டர் வாங்கிவர அனுப்பிவிடுவார். என்தலையைக் கண்டதும் போஸ்ட்மேன் தயாராக எடுத்து வைத்திருக்கும் பத்திரிக்கை கடிதங்களை எடுத்துக் கொடுத்து விடுவார். அப்போது கதை தேர்வானதும் கடிதம் எழுதுவார்கள். தங்கள் கதை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இந்த இதழில் வெளியாகும் என்பதை