பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - }– - s 47 } மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கடிதம் வரும். பத்திரிகைக்கு அனுப்பி பிரசுரத்திற்கு ஏற்கப்படாத கதைகளும் திரும்பி விடும். ஒரு சில பத்திரிகைகளில் வெளியான கதைக்கு சன்மானம் செக்காக அனுப்புவதும் உண்டு. வங்கிக் கணக்கு மதுரையில்தான்வைத்திருந்தார். நண்பர்கள், வாசகர்களிடமிருந்து நிறைய கடிதம் வரும். - எந்த கடிதமாயிருந்தாலும் உடன் மறுமொழி எழுதிவிடுவார். பள்ளியில் லீஷர் பீரியட் உண்டு. அந்தநேரத்தில் நோட்ஸ் ஆப்லெஸன்எழுதுவார். அதுபோக மீதமுள்ள நேரத்தில் நேர்த்தை வீணாக்காமல் கதை எழுதுவார். அதனால்தான் அவர் நோட்ஸ் ஆப் லெஸ்ன் எழுதும் அளவான நோட்டையே கதை எழுதவும் பயன்படுத்தினார். fv * . . . . ஒரு கதையை எழுதி முடித்துவிட்டு அடுத்த கதை எழுதுவது என்ற பழக்கம் இல்லை. ஒரே சமயத்தில் இரண்டு மூன்று நாவல்கள் எழுத ஆரம்பித்து, தினமும் ஒவ்வொரு நாவலிலும் ஒரு அத்தியாயம் எழுதிவிடுவார். அப்போது பத்திரிகைகளில் அறிவிக்கப்பட்ட எல்லா போட்டிகளிலும் ஆவலுடன் கலந்து கொண்டார். ஆனந்த விகடன் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கு 3 சிறுகதைகள் அனுப்பினார் அவைகள் பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாயின. - கிராமத்து கறந்த பாலில் நல்ல காபி இரண்டு மூன்று முறை அருந்துவார். எனக்குகிராமத்தில் காபி பழக்கம் கிடையாது. நாபாவீடு வந்துதான் எனக்கு காபி பழக்கம் ஏற்பட்டது. கிணற்றில் தண்ணிருக்கு பஞ்சமில்லை. அதனால் வாளி வாளியாகத் தண்ணீர் இறைத்துக் குளிப்பார். மைசூர் சாண்டல் சோப்தான் உபயோகிப்பார். ஒரு வாரத்திற்கு ஒரு சோப் காலியாகி விடும். கிணற்றடியே மைசூர்சாண்டல்மயமாகிவிடும். அவர்மீது மைசூர் சாண்டல் பவுடர் மணக்கும். அதுவும் சாண்டல் பவுடர் தான். குளிக்கும் முன் தினமும் தலையில் கொழும்புத் தேங்கா யெண்ணெய் தடவிக் கொண்டு குளிப்பார். தினமும் ஷேவ் செய்து கொள்ளவார். அவர் தினமும் தவறாமல் வெண் பொங்கல், தக்காளி-தயிர் பச்சடி,பொங்கலில் முதலில் நெய் ஊற்றி-பின்னர் தயிர் ஊற்றி சாப்பிடுவார். பகலில் சாம்பார் ரசம், கூட்டு பொரியல், ரசம் அப்பளம் என்று ஒன்றும் குறைவில்லாமல் இருக்க வேண்டும். இரவும் சுடு சோறும், மிளகுரசம், சுட்டஅப்பளம். ஒரு