பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(D–{Eeg உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி ) நாள் வேப்பம் பூ ரசம் என்று என் மாமி வகை வகையாக பார்த்து பார்த்து சமைப்பார். என் மாமி செய்து போட்ட வாழைக்காய், உருளைக் கிழங்கு பொடிமாஸ், எண்ணை வாழைக்காய், எண்ணைக் கத்திரிக்காய், மோர்க் கீரை.போல் வேறு யாரும் செய்ததே கிடையாது. புதன், சனி கிழமைகளில் எண்ணைக் குளியல் தவறாது. அதற்கு சீகைக்காய் பொடியை உபயோகிக்க மாட்டார். சீகைக் காயை ஊற வைத்து, வெந்தயம் சேர்த்து அரைத்த தூள் தான் பயன்படுத்துவார். எண்ணைக்குளியல் அன்று மட்டும் வெந்நீர். தினமும் இரண்டு வேளை குளியல். துணிகளை வீட்டில் துவைப்பது இல்லை. சலவைக்குத்தான் போடுவார். மடிப்புக் கலையாமல் அணிவதில் கவனம் செலுத்துவார். இரவில் தினமும் சந்தனக் கல்லில் சந்தனக்கட்டையை அரைத்துத் தர வேண்டும் அதை இரவில் முகத்தில் பூசிக்கொள்வார். மொத்தத்தில் அழகின் உபாசகர், சாப்பாட்டுப்பிரியர். அதனால்தான் அந்த மாபெரும் ருசி எழுத்திலும் படிந்து விட்டதோ! கையெழுத்து மணிமணியாக இருக்கும். ஒரு அடித்தல் திருத்தல் இருக்காது. முதலில் எழுதுவதுடன் சரி. திருப்பி எழுதுவதோ-திருத்தி எழுதுவதோ கிடையாது. - கலைமகள் நாராயணசாமி அய்யர் நாவல் போட்டிக்கு பிறந்த மண் நாவல் அனுப்பினார். ஆனந்த விகடன் நாவல் போட்டிக்கு கோபுர தீபம் என்ற நாவலை அனுப்பினார். நாவல்களை பதிவுத்தபாலில் With Ack Due வுடன் அனுப்புவார். எள்வளவு முன் ஜாக்கிரதை உணர்வு. அப்படி எச்சரிக்கை இருந்த காரணத்தால்தான்கல்கிக்கு அனுப்பியபாண்டிமாதேவி பிழைத்தது. அந்தக் கதை அனுப்பி முடிவு தெரியாத நிலையில் கடித்ம் எழுதி விசாரித்த போது அப்படி ஒரு நாவல் தங்களுக்கு வரவே இல்லை எனபதில் வந்தது. இவர் பதிவுதபாலில் அனுப்பிAck வந்திருந்தது. எனவே கல்கிக்கு இத்தனாம் தேதி அனுப்பி இவர் பற்றிருக்கிறார் என்று பதில் எழுதாமல் தபால் இலாகாவுக்கு புகார் செய்து விட்டார். தபால் இலாகா அவர்களிடம் சென்று இன்று டெலிவரி செய்து இருக்கிறோம். இவர் கையெழுத்திட்டு வாங்கி இருக்கிறார் என்பதை உறுதி செய்தபின். அந்த நாவல் கண்டெடுக்கப்பட்டு பிரசுரமானது. அவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும் தினமணி கதிருக்கு அனுப்பிய குருவி மலை கோட்டை