பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் త్రొబ్లీ ரம் " தீபம்' 匣 பார்த்தசாரதி) கதைக் கரு என்றே ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்தார். நூற்றுக்கணக்கான கதைக் கருக்கள் அந்த நோட்டில் எழுதி வைத்திருக்கிறார். அதில் ஒரு கதையை எழுதிவிட்டால் அதில் Y போட்டு விடுவார். அதாவது அந்தக்கரு எழுதப்பட்டு விட்டது என்று அர்த்தம். அதே போல் முகவரி நோட்டு ஒன்றும் வைத்திருப்பார். அதில் அவர் தொடர்புடைய எல்லாஎழுத்தாளர்கள் முகவரிகளும் - அகர வரிசைப் படி எழுதிவைத்திருப்பார். அந்த நோட்டே 120 நோட் புத்தக அளவில் இருந்தது. கடிதங்களை பைல் விலைக்கு வாங்கி அழகாக பைல் செய்து வைப்பார். கடிதம் வந்த தேதி Received Date என்று தேதியும் மறுமொழி எழுதி விட்டால் Replied என்றும் எழுதிவிடுவார். நட்பு வட்டாரத்தைக் கூட அலுவலக ஒழுங்குடன் நடத்தி வந்தார். அதனால் தான் தீபம் ஆரம்பிக்க நினைத்தபோது அவர் டைரியில் இருந்த 1500முகவரிகளுக்கு சந்தா கேட்டுக் கடித்ம் எழுதி-ஆயிரம் சந்தா வந்தது என்பது நிஜம். நா.பா. கதை எழுதுவதுடன் நன்கு படமும் வரைவார். அவருடையசரித்திரக்கதைகளுக்கு கதாபாத்திரங்களின் தலையலங்' கார அணிமணிகள் கிரீடம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவியர்களுக்கு வரைந்து காட்டுவார். . தமிழாசிரியராக இருந்த போது பாடம் நடத்தும் போது அந்தப்பாடக் காட்சியையே ஒவியமாக வரைந்து காட்டுவார். கம்பராமாயணத்தில் தண்டலை மயில்கள் ஆட என்ற பாடலை விளக்க தாமரை மயில்-மேகத்தை வரைந்து காட்டியது இன்னும் நன்கு நினைவில் இருக்கிறது. அதனால்தான் அவரால் கதைகளை சொல்லில் ஒரு சித்திரமாக வழங்க முடிந்ததோ . . . வந்திராயிருப்பில் ஒரு மாணவருக்கு-வித்வான் அல்லது பண்டிட் படித்து வந்தார் என்று நினைவு. அவருக்கு, பாடம் கற்றுக் கொடுப்பதற்கு டியூஷன் பீஸ் வாங்க மறுத்து விட்டார். ஆனால் அவரோ இலவசமாகக் கற்றுக் கொள்ள விரும்பவில்லை. நாபா வின்தாயாரிடம் உங்களுக்கு என்ன தேவை என்று கேட்க அவரோ ஒரு கரிமூட்டை இருந்தால் சமைக்க உதவும் என்று கூற, மாதா மாதம் படித்து வந்த காலங்களில் ஒரு கரிமூட்டையை அனுப்பியது இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது. . . . - -இது நா.பா.வின் கதையின் ஒரு பகுதி முழுப்பகுதி நூலாக வெளிவரும் போது படித்துக் கொள்ளுங்கள்.