பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ வைத்த தீப ஒளி கெளதம நீலாம்பரன் ஒரு பத்திரிகையாளனாகவோ, எழுத்தாளனாகவோ நான் ஆவேன் என்று சிறிதும் எண்ணியதில்லை. 'தீபம் தந்த வெளிச்சம்தான் என் வாழ்வில் இந்த மாய மாற்றத்தை நிகழ்த்தியது. - - அதுவும் இருண்டு கிடந்த கவலைக் கடலில் நான் தத்தளித்துக் கிடந்த போது, கலங்கரை விளக்கத்தின் நம்பிக்கை ஒளியாய், தீப வெளிச்சம் என் மீது பட்டு, என்னைக் கரை சேர்த்தது. - - - - - - 1967, 68 களில் நான் சென்னை நகரின் தெருக்களில், குறிக்கோளின்றி சுற்றிக்கொண்டிருந்தேன். சென்னைக்கு வந்தது சினிமா ஆசையால்தான். அதற்கு வழி ஒன்றும் புலப்படாது போனதால், அந்த ஆசை நிராசையானது. ஊருக்குத் திரும்பவோ மனமில்லை. வீதிகளில் தஞ்சமடைந்தேன். என் வாழ்வு தறிகெட்டு, சிதைந்து, சின்னாபின்னமாகியிருக்கும். அதிர்ஷ்ட வசமாகச் சில நண்பர்கள் கிடைத்தனர். நண்பர்கள் சிலர் ஒய்வு நேரங்களில் கதைப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். நானும் அவற்றை இரவல் வாங்கிப்படிப்பேன். - * மண்ணடி பவழக்காரத் தெருவில் உள்ள கிருஷ்ணன் கோவிலருகில் இருந்தது நண்பர்கள் தங்கியிருந்த அறை. சில போதுகளில் நான் அங்கு சென்று தங்குவதுண்டு. அதன் அருகில் ஒரு பெரியவர் வாடகைநூலகம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு ரூபாய் கொடுத்து மெம்பர்ஷிப்கார்டு வாங்கினேன். ஒரு புத்தகம் படிக்க நாலனா தர வேண்டும். நிரந்தர வேலையற்ற அந்த நாட்களில், நாலணா சம்பாதிக்கப்படாதபாடு பட வேண்டும். ராஜா அண்ணாமலை மன்றத்தின் பின்னால் உள்ள வெளியூர் பஸ் நிலையத்தில் மங்களா கேப் என்று ஒரு உணவு விடுதி உண்டு. அதில் ஒரு மணி நேரம் சப்ளையர் வேலை பார்த்தால் நாலணா சம்பவும். எப்போதுமே அங்கு கூட்டம் நிரம்பி வழியும். காலையில் இரண்டு மணி நேரம் அங்கு சென்று