பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் } - { 55D உருவாயின. அந்த மிஷினையும் மோகன் தயார் செய்த பிறகு நானே இயக்கப் பழகினேன். அச்சகத்தில் வேலையில்லாத நேரத்தில் நான் தீபம் அலுவலகம் வந்துவிடுவேன். தினமும் மூன்று முறைமவுண்ட் ரோடு போஸ்ட் ஆபிஸ் சென்று, தனி போஸ்ட் பாக்ஸிலிருந்து தபால்களை எடுத்து வர வேண்டும். டவுனுக்குச் சென்று திருமலை சொல்கிற கடைகளிலிருந்து பேப்பர், அச்சுமை வாங்கி வர வேண்டும். சில போதுகளில் திருவல்லிக் கேணியில் உள்ள கடைகளிலேயே வாங்கிவிடுவோம். நிறைய விளம்பர நிறுவனங்களுக்குச் சென்று, தீபம் டேர் ப் கொடுத்து, விளம்பரம் சேகரித்து வர வேண்டும். - தீபம் உருவாக அதிகம் உழைப்பவர்கள் என்று, திருமலை, நான், ராஜதுரை, மோகன் ஆகிய நால்வரையும் தான் சொல்ல வேண்டும்.ஒரு குடும்பம் போல் நாங்கள் பாசத்தோடு பழகினோம். திருமலை நா.பா.வின் உறவினர். மற்ற முவரும் நா.பா.வின் தீவிர ரசிகர்கள். இதுபோகப் போகத்ததான் எனக்கு புரிந்தது. ராஜதுரை வெறும் கம்பாஸிடர் மட்டுமல்ல. நல்ல இலக்கிய ரசிகர். ஜெயகாந்தன் மீதும் நா.பா. மீதும் அவர் கொண்டிருந்த பற்று அசாதாரணமானது. எனக்கு முன்னால் "தீபத்தில் எஸ்.சம்பத் என்பவர் வேலை பார்த்தார். இவர் மீது ராஜதுரைக்கு அதீத பாசம் உண்டு. வாழ்வில் மிகப்பெரிய அளவு முன்னுக்கு வர வேண்டியவன். என்ன துரதிர்ஷ்டமோ அவன் அப்படி வரவில்லை என அடிக்கடி ஆதங்கப்படுவார். இந்த சம்பத் ஷோபாலலித் என்கிற பெயரில் நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவர் அப்போது 'அலை ஓசை’ நாளிதழில் புரூப் ரீடராகப் பணிப்புரிந்தார். அடிக்கடி தீபம்'அலுவலகம் வந்து செல்வார். தீபத்தில் ஆரம்பத்தில் நான் பெற்ற சம்பளம் ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் தான். இதில் பெரிய ஒட்டல்களில் போய் சாப்பிட முடியாது. டீக்கடையில் குறைந்த விலைச் சாப்பாடு கிடைக்கும். இதைத்தான் சாப்பிடுவேன். நான் சைவ சாப்பாட்டுக்காரன். ஆனால், அதை அசைவ சாப்பாடுக் கடையில் சாப்பிடுகிற மாதிரி சூழ்நிலை. ஒரு முறை தீபம் அச்சகத்துக்கு வந்த நா.பா., பக்கத்து டீக்கடையில் நான் சாப்பிடுவதை அறிந்து, அங்கேயே திடுமென்று வந்து