பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ੋ-ਾਂ உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி } நின்றுவிட்டார். பிறகு, என்னப்பா இதெல்லாம்... நல்ல ஒட்டலில் சாப்பிடக் கூடாதா? என்று கேட்டார். நான் என் நிலையை விளக்கினேன். உடனே நா.பா.என்னை, இனிமேல் நீ என் வீட்டிலேயே வந்து தங்கிவிடு' என்று கூறிவிட்டார். மாம்பலம் சி.ஐ.டி நகரிலிருந்த நா.பா.வீட்டுக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு தான். கதைகள் எழுதி வைத்திருப்பார். தொடர்க்தை அத்தியாயங்களை நான் அவருடைய வீட்டுக்குச் சென்று வாங்கிப் போய், விகடன், கல்கி போன்ற இதழ் அலுவலகங்களில் கொடுத்து வருவேன். - - என்ன காரணத்தாலோ நான் நா.பா. வீட்டில் தங்க முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் நா.பா.வின் குழந்தைகளை நான் அடிக்கடி, கண்ணதாசன் வீட்டுக்கு எதிரே இருக்கும் பூங்காவுக்குதுக்கிச்செல்வேன். நா.பா. குழந்தைகளை அழைத்துக் கொண்டு சில மாலை வேளைகளில் பீச்சுக்கு வருவார். நானும் உடன் செல்வேன். யாராவது இலக்கியப் பிரமுகர்கள் சந்தித்து விட்டால் நா.பா.வோடு மணிக்கணக்கில் பேச ஆரம்பித்து விடுவார்கள். நான் குழந்தைகளை அலையோரம் அழைத்துச் சென்று விளையாட்டு காட்டி, அழைத்து வருவேன். பிறகு அவர்களை நா.பா.வுடன் பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு, தீபம் அலுவலகத்துக்கு வந்துவிடுவேன். குளியல், படுக்கை எல்லாம் அங்கேயே தான் ஒரேயொரு டிரங்குப்பெட்டிதவிர என்னிடம் வேறு பொருள்கள் ஏதுமில்லை. மாற்று உடுப்பு ஒரு செட் இருக்கும். இரவில் திருமலை தீபம்' அலுவலகத்தையும் பூட்டிச் சென்ற பின், அந்த அறையின் வாசலிலேயே படுத்திருப்பேன். அது பெரிய கட்டிடம். நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ், மெட்ரோ பாலிடன் பிரஸ், மவுண்ட் பார்மஸின் ஸ்டாக் ரூம், கோவாப் டெக்ஸின் குடோன், சம்யுக்த கர்நாடகா எனும் கன்னடப் பத்திரிகையின் சென்னை அலுவலகம் என பல்வேறு நிறுவனங்கள் அதில் செயல்பட்டன. மொட்ட்ை மாடியில், பத்திரிகைகளுக்குத் தேவையான படங்களை பிளாக் செய்து தரும் மேரிபிராஸஸ் ஒன்றும் இருந்தது. இதை நடத்தும் அந்தோணி, இரவில் வெகுநேரம் இருப்பார். இதனால் தனிமையோ, பயமோ இல்லாமல் அங்கு படுத்துக் கிடப்பேன். அந்தோணி கிளம்பி விட்டாலும் மெட்ரோ பாலிடன் பிரஸ்ஸில்