பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் }- - . Căş ) ஒரு போட்டியாக இருந்திருப்பார். இவரளவு நான் அழகாக இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ வெற்றிச் சிகரங்களை எட்டியிருப்பேன். அப்பா... என்னவொரு கம்பீரம் என மனம் விட்டுப் பாராட்டினார். .” இன்னும் எத்தனையோ பேர், எம்.ஜி.ஆர். மாதிரி இருக்கிறார் நா.பா. என்று புகழ்ந்ததைக் கேட்டிருக்கிறேன். தீபம் அலுவலகத்திலும் பல எழுத்தாளர்களும் நா.பா.வின் ரசிகர்களும் வந்து அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருப்பர். நா.பா. முகம்சுளிக்காமல் அத்தனைபேருடனும் இனிமையாகப் பேசுவார். அப்படி வருகிற பலரும் பெரிய பெரிய உத்தியோகம் பார்ப்பவர்களாகவும் இருக்கும். ஆனால், தீபத்தில் நா.பா. இட்ட வேலைகளை ஆர்வமுடன் செய்துகொண்டிருப்பர். தீபம் இதழ்களைக் கடையில் போடுவதை விட, சந்தாதாரர் எண்ணிக்கையே அதிகம். ஆயிரக் கணக்கான பிரதிகளுக்கு சந்தாதாரர் விலாசம் ஒட்டிய உறைகளைச்சுற்ற வேண்டும். இது ப்ோன்ற பணிகளை மிகப் பெரிய உத்தியோகம் பார்க்கும் பலர் அங்கு வந்து, ஒரு தொண்டு போலச் செய்வர். - நா.பா. பவர் என்று ஒர் இலக்கிய அமைப்பை ஆரம்பித்து நடத்தினார். மாதத்தில் ஒரு நாள் நிகழும் இந்த பவர் அமைப் பின் கூட்டத்திற்கு அத்தனை எழுத்தாளர்களும் வருவர். பழைமைச் சிந்தனைகள் மாறாத முதுபெரும் தமிழறிஞர் கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ., முற்போக்குச் சிந்தனையுள்ள பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் சா.கந்தசாமி அனல் பறக்கும் அரசியல் விமரிசனக் கட்டுரைகளை எழுதும் சின்னக் குத்தூசி, மொழி பெயர்ப்பு இலக்கிய வித்தகர்கள் என்று பலதரப்பட்ட எழுத்தாளர்களும் அங்கு ஒன்று கூடுவர். மாடியில், தரையில் ஜமக்காளம் விரித்து அமர்ந்து விவாதங்கள் நிகழும். எத்தனை மாறுபட்ட கருத்துகள் எத்தனை உரத்த குரலில் பேசப்பட்டா லும், இறுதியில் அன்பும் மரியாதையும் மாறாமல் ஒருவரோ டொருவர் கைகுலுக்கி, மகிழ்வுடன் கலைந்து செல்வர். உலகப் பார்வை, சமூகச் சிந்தனை, படைப்புகளின் உன்னதம் என்று ஏராளமான விஷயங்களை இந்தக் கூட்டங் களில் என்னைப் போன்றவர்கள் பெறமுடிந்தது என்றால் அது மிகையில்லை. ஒரு நல்ல கதையை எங்கே படித்திருந்தாலும் அதைப்பற்றி அங்கே சிலாகித்துப் பேசுவார்கள். எழுதும்