பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி D கனவுகளோடு உள்ள ஒரு புதிய இளைஞனுக்கு இது ஒரு பயிற்சிப் பட்டறை போலவே இருந்தது எனலாம். உப்பிலி சீனிவாசன், அ.நா. பாலகிருஷ்ணன், சங்கரி புத்திரன், ஆவடி சீனிவாசன், பாலசுப்பிரமணியன், எம்.எஸ். தியாகராஜன், கண்ணன், மகேஷ் போன்ற பலர் 'தீபம்' அலுவலகத்திற்கு அடிக்கடி வருவார்கள். எல்லோருமே நல்ல உத்தியோகத்தில் இருந்தனர். எழுத்துக் கனவு சிலரிடம் இருந்தது, சிலர் நல்ல ரசனையோடு மட்டும் இருந்தனர். மு.மேத்தா, நா.காமராசன் போன்ற அருமையான கவிஞர்களின் ஆரம்பகாலப் புகழ்மிக்க படைப்புகள் தீபத்தில் தான் வெளியாயின. மொழிபெயர்ப்புக்கெனசாகித்ய அகாடமி விருது பெற்ற குறிஞ்சி வேலனின் அற்புதமான பல படைப்புகள் தீபத்தில் இடம் பெற்றன. தெருவில் கிடந்த என்னை எடுத்துத்துரசு தட்டி, ஒரு நல்ல மனிதனாக - எழுதும் ஆற்றலுடையவனாக ஆக்கியவர் நா.பா. 'காணும் உலகம் மட்டுமே அறிந்திருந்த எனக்கு 'அறியும் உலகம்' ஒன்றிருக்கிறது என உணர்த்தியவர் நா.பா. அவருடைய தொடர்பு மட்டும் ஏற்படாது போயிருந்தால், நான் சிதைந்துசின்னாபின்னமாகியிருப்பேன். У . தீபத்தின் மாய ஒளிதான் என்னையும் ஓர் எழுத்தாளன் என்று பெயர் சொல்லி, வாழ வைத்திருக்கிறது. நா.பா.வையும் மறக்க மாட்டேன்: இராமகிருஷ்ணனுக்கு ஒரு விவேகானந்தர் அமைந்ததுபோல, பெறாத பிள்ளையாய்-சீடனாய் நண்பனாய் இருந்து நா.பா.வின் புகழ்பரப்ப என்றென்றும் பாடுபடுகின்ற அ.நா.பாலகிருஷ்ணனையும் என்னால் என்றும் மறக்கமுடியாது.