பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - - - - —C53D பாரதியின் ஆக்ரோஷமான உணர்வு சிலநேரங்களில் நா.பா. அவர்களின் பேச்சில் தொனிக்கும். . . . . - அந்த அளவுக்கு தீமை செய்பவர்களைக் கண்டு வெறுப்புடன் பேசுவார். - - - தீபம் அலுவலக மேல்மாடியில் எழுத்தாளர்கள் அகிலன், க.நா.சுப்ரமண்யம் தி.க.சிவசங்கரன், நண்பர் ஜெயகாந்தன் போன்ற பல எழுத்தாளர்களோடு நா.பா. அவர்களும் அமர்ந்து கொண்டு இலக்கிய சர்ச்சை செய்வார்கள். அப்போது வெளி வந்த நாவல்கள், சிறுகதைகள் இவை கள் எவ்வாறு சமூகத்தை பிரதிபலிக்கின்றன என்பது பற்றி அவரவர் கருத்தைச் சொல்லி விவாதிப்பார்கள். - நண்பர் இரா.தி. அவர்களோடு நானும் ஒரு பார்வையாளனாக இருப்பேன். . . . . அவர்கள் விவாதிக்கும் போது எனக்குத் தெரியாத பல செய்திகளைக் தெரிந்து கொள்கின்ற ஆய்வுக்கூட மாகவே அமையும். - - 1976ல் தீபம் நா.பார்த்தசாரதி அவர்கள் தேசிய சிந்தனையாளர் மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கி, பாரத தேசப் பண்பாடு, மொழி, கலை, நாகரீகம் ஆகியவற்றைக் காப்பாற்ற எண்ணி பல ஊர்களுக்கு பயணம் செய்து அமைப்பை பலப்படுத்துகிறார். - - அந்தப் பயணத்தில் திருவாரூருக்கும் வந்தார். .திருவாரூரில் அ.மீ. இராமமூர்த்தி என்ற நண்பர்தான் தேசிய சிந்தனையாளர் மன்ற கிளையை ஏற்படுத்தினார். அதன் தொடக்க விழாவிற்கு நா.பா. அவர்கள் காலையி லேயே வந்துவிட்டார். - - - திருவாரூர் லெனின் புத்தக நிலையத்துக்கு வந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார். புத்தக நிலையத்தில் நா.பா. அவர்களது நாவல்கள் தீபம் மாத இதழ் ஆகியவை விற்பனை செய்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். - பின்னர், தேசிய சிந்தனையாளர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. -