பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(೯D–{ಿ உலகின் நட்சத்திரம் தீபம்' நா. பார்த்தசாரதி D கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்வதற்கு அவர் தயங்கியது g)Gi;goyav. {3}{5} - ?jav(t5&ol u"Professional integrity" $359(5 g T&öt[D] என்று எண்ணுகிறேன். - 'கல்கி நிறுவனத்தை விட்டு விலகிய நிலைமையிலும், 'தீபம்' பத்திரிகை தொடங்கி நடத்தி வந்த காலத்திலும் எண்ணற்ற நாட்களில் நாங்கள் சந்தித்திருக்கின்றோம். அவரது தனி வாழ்க்கையில் அவர் உதவி நாடி சென்றது கிடையாது. அவரது தன்னம்பிக்கை (Self Confidence) அளவற்றது. x வேறு எழுத்தாளர்களைப் போல இல்லாமல் அவர் முதலில் இருந்தே, முறைப்படுத்திய விதத்தில் நடந்து கொண்டார். (systematic) தனக்கு வருகிற ஒவ்வொரு கடிதத்தையும் சீராக பார்த்து பதில் அளிப்பதுடன், அதை எழுதியவரது விவரங்களை குறித்து வைத்துக் கொள்வார். காலப்போக்கில் நா.பா. வாசகர் வட்டம் என்பது அவரது விரல் துணிகளில் இருந்தது. 'தீபம்' பத்திரிகை ஆரம்பிக்க இருந்த நேரத்தில் எத்தனை வாசகர்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள் என்று அவருக்கு நிதர்சனமாக இருந்தது. உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, அவருக்கு வாசக ஆதரவாளர்கள் இருந்தனர். தங்கள் நா.பா.வுக்காக இவர்கள் எந்த உதவியும் செய்யத் தயாராகவே இருந்தார்கள். - - - - அவருடைய வெளிநாட்டுப் பயணங்கள் எல்லாம், 'தீபம்' பத்திரிகை வளர்ச்சிக்காகவே ஏற்கப்பட்டன எனச் சொல்லலாம். . - - 'தீபம்' பத்திரிகை அச்சிடுவதற்கு என் மனைவியின் உறவினர் திரு. நடராஜன் உதவியாக இருந்தார். அந்த அச்சகம் இருந்த கட்டிடத்திலேயே அவசர காலங்களில் நா.பா. தங்கி பத்திரிகை வெளியீட்டு விஷயங்களை கவனிப்பதற்கு என் உறவினர் தங்கி இருந்த அறை வசதியாக இருந்தது. இரவு, பகல் பார்க்காமல் நா.பா. உழைப்பதை பற்றி என்னிடம் பலமுறை என் உறவினர் கூறி இருக்கிறார். - . . . . . . . . . தொடக்க காலத்தில் மாபெரும் எழுத்தாளர்களான கு.அழகிரிசாமி, திரு.ஜானகிராமன் போன்றவர்களை சந்திக்கப் போகும் போது சில நேரங்களில் நானும் உடன் செல்வேன். 'தீபம்' பத்திரிகை நடத்துவதை ஒரு வேள்வியாக தொடங்கி