பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( வல்லிக்கண்ணன் - - . . . GED எனது ஊரின் தென் கிழக்கே சுமார் 6கி.மீ. தூரத்தில் தான் அவர் பிறந்த ஊரான நதிக்குடி உள்ளது. அவர் எங்கள் ஊருக்கு வடமேற்கே சுமார் 25கி.மீ. தூரத்தில் இயற்கை எழில் குலுங்கும் வற்றாயிருப்பு என்ற ஊரில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1957 செப்டம்பர் மாதம் நேரில் காண வற்றாயிருப்பு சென்றேன். தெற்குத் தெருவில் குடியிருந்தார். நான் சென்று அவரைப் பார்த்து அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தோம். அவர் லா.ச.ராவின் ஜனனியைக் கையில் வைத்திருந்தார். லா.ச.ரா. தபஸ் என்ற தலைப்பில் முன்னுரை எழுதியுள்ளார். நண்ப' எனத் தொடங்கும் அந்தத் தொடரை வாசித்துக் காட்டி, என்ன சக்தி மிகுந்த வார்த்தைகள் என்று பாராட்டினார். நானும் "ஜனனியைப் பலமுறைப் படித்துச் சுவைத்தவன் என்ற வகையில் அந்நூலில் உள்ள அனைத்துச் சிறுகதைகளையும் விமர்சித்தேன். அதில் சில வாக்கியங்கள் மனதில் உறைந்ததையும் எடுத்துக் கூறினேன். நான் இவ்வளவு ஆழமாக லா.ச.ராவைப்படித்திருப்பேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. "சுப.சோ.நீங்கள் ஓர் நல்ல ரசிகர் என்று கடிதங்கள் மூலம் அறிந்தேன். இன்று நேரிலும் புரிந்து கொண்டேன்' என்று மனமாறப் பாராட்டினார். . 1958 இல் வற்றாயிருப்பில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. உடன் அவர் சகோதரியின் மணமும் நடந்தது. இந்தத் திருமணச் செலவிற்கு 'பாண்டிமா தேவி எழுதக் கிடைத்த சன்மானம் ஓரளவிற்கு உதவியதாகச்சொன்னார். நான் பேருந்து கிடைக்காமல் திருமணத்திற்கு, ரீவில்லி புத்துரிலிருந்து லாரியில் சென்ற அனுபவம் என்னால் மறக்க இயலாது. மதுரை நகரிலிருந்து பல எழுத்தாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள். - . வற்றாயிருப்பில் பணியாற்றும் போதே சில இலக்கிய நண்பர்களுடன் சேர்ந்து 'மதுரையில் எழுத்தாளர் சங்கம் ஒன்றை ஆரம்பித்து, அச்சங்கத்தின் செயலாளராகவும் திறம்பட பணியாற்றினார் நா.பா. மாதம் ஒர் ஞாயிற்றுக்கிழமை, மதுரையில் ஓரிடத்தில் கூட்டம் நடைபெறும். தேனிசெல்லும் சாலையில் உள்ள அச்சம் பத்து என்ற இடத்தில் தென்னந் தோப்பு மத்தியில் கூட ஒர் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாசி வீதியில் அமைந்திருந்த 'கல்கி கிளை அலுவலகக் கட்டிடத்தில் சில கூட்டங்கள் நடந்தன. இரவு 'கல்கி'