பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் } {71 } ஒருமுறை மர்லை நேரம் வீட்டில் பேசிக் கொண்டிருந் தோம். பக்கத்து வீட்டு வானொலியில் தோஆங்கே பாராஹாத்' படப் பாடலான 'ஹே மாலிக்" என்ற பாடல் ஒலிபரப்பானது. இதைக் கேட்ட நா.பா. சொன்னார். சுப.கோ. இந்தப் பாடல் எப்பொழுதும் என் மனதை உருக்கிவிடும். இப்பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம், ஒராயிரம் கவிதைகள் எழுத்லாம் என்று தோன்றுகிறது' என்றார். 1958இல் வற்றாயிருப்பில் இருக்கும் பொழுதே இலங்கை யில் இலக்கியப் பயணம் சென்று வந்தார். நா.பா. அப்பயணம் பற்றி திண்மணி கதிர்வார இதழில் "தென்னை மரத்தீவினிலே" என்ற பயணக்கட்டுரையும் எழுதினார். ஒரு முறை மதுரை சென்று வழக்கம்போல வீட்டிற்குச் சென்றேன். மாலை இருவரும் நகர் சென்றோம். மதுரை சிடி திரையரங்கில் 'தி கேட்வே ஆப் இந்தியா என்ற மதுபாலா நடித்த படம் ஒடிக் கொண்டிருந்தது. நா.பா. அவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்றார். சரி என்று படம் பார்த்தோம். நா.பா. அவர்களுடன் நான் பார்த்த ஒரே படம் இதுதான். படம் முடிந்து வெளிவந்து, சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு மத்திய பேருந்துநிலையம் வந்தோம். அப்பொழுது மணி 10க்கு மேலாகி விட்டது. நகருந்துகள் தனியாரின் கீழ் இயங்கிய காலம் 10 மணிக்கு மேல் நகருந்துகள் நகரா. ஒரு சைக்கிள் ரிக்ஷா ஒட்டுநரிடம் திருப்பரங்குன்றம் செல்ல கூலி கேட்டோம். தொகை சற்று அதிகமாகக் கேட்க, 'நடந்தே போய்விடுவோம்’ என்று கூறினார் நா.பா. நல்ல நிலவுக் காலம் இப்பொழுது போல வாகனத் தொல்லைகள் இல்லை. பேசிக் கொண்டே நடந்தோம். 'பசுமலை'யில் அவர் வீடு வந்தோம். நானோ திருப்பரங்குன்றம் பொறியியற் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். வீட்டில் தகவல் கூறிவிட்டு, அருகே குடியிருந்த எழுத்தாளர் திலகம் ரகுநாதன் வீடு சென்று எழுப்பினார். அவரும் உடன் வந்தார். மூவரும் பல்வேறு தலைப்புகளில் விவாதித்த படி நடை பயணம் தொடர்ந்தோம். 12 மணிக்கு நாங்கள் கல்லூரி விடுதி அடைந்தோம். மாடி ஏறி - நண்பர் அறையைத் தட்டி திறக்கச் செய்தேன். பின்னர் கையை அசைத்து கீழே இருந்தவர்களிடம் போகச்சொன்னேன்.