பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gਰੁ) - எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி) ஒர் இலக்கிய வாசகர்களுக்காக இரவு நேரத்தில் 6 மைல் தூரம் நடந்தேவந்து விட்டுச் சென்ற இந்தப் பண்பு வெகுவாக போற்றப்பட வேண்டியதாகும். - 'குறிஞ்சி மலர் நாவல் கதாநாயகன் ஒர் லட்சியப் பாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது யாவரும் அறிவர். கதாநாயகன் ஓர் இரவு குளிரில் நடுங்கிய நடைபாதை ஏழைக்குப் போர்வை கொடுப்பதாக எழுதியிருப்பார். இந்த மாதிரி மனிதர்கள் இப்பொழுதும் உண்டா? என்று நா.பா.விடம் கேட்டேன். அவர் 'ஏன் நானே இந்த மாதிரி ஏழைக்கு எனது துண்டு கொடுத்து உதவியிருக்கிறேன். எனவே இது மிகையல்ல" என்றார். - - + மற்றொரு ஞாயிறு எழுத்தாளர் கர்ணனும் நானும் காலை 9.மணிஅளவில் வசந்தா நகர்வீட்டிற்குச் சென்றோம். என்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார். அறையில் உட்காருங்கள். குளித்து விட்டு வந்து விடுகிறேன் என்றார். குளித்து, சாப்பிட்டு வந்தவர் 'இன்று உங்களை ஓரிடத்திற்கு அழைத்துச்செல்லப் போகிறேன் என்றார். எங்கே, என்றோம். திருவேடகம்' என்றார். நகருந்து ஏறி 11 மணி அளவில் திருவேடகம் சென்றோம். இங்கு பாடல் பெற்ற சிவன்கோவில் உண்டு. கோவிலைச்சுற்றி வந்து, வணங்கினோம். கோவில் வரலாறு பற்றி அங்கிருந்த வழிபாடு செய்பவரிடம் விசாரித்தார். பின் சாலையோரக் கடையில் கிடைத்த சிற்றுண்டி காபி சாப்பிட்டு விட்டு, ஆற்றின் அக்கரையில் இருந்த தென்னந்தோப்பிற்குச் சென்றோம். சுமார் 2மணிநேரம் இலக்கியரசனைமிக்கஉரையாடல்கள் தொடர்ந்தன. திரு. கர்ணனும் சிறுகதைகள் எழுதிவந்த நேரம் மாலை 4மணி அளவில் புறப்பட்டு மதுரை வந்தோம். அவர் வசந்தா நகர் சென்றார். நான் ஊர் வந்தேன். இரு வாரங்களுக்குப்பின் 'குறிஞ்சி மலர் தொடரில் இந்தத் திருவேடகம் சிவன் கோவில் பற்றியும், ஊரின் பெருமை பற்றியும் எழுதியிருந்தார். நா.பா. எழுதும் எந்த நாவல், சிறு கதையாயினும் தகுந்த ஆதாரங்களை முன்வைத்துத்தான் எழுதுவார். நா.பா. அவர்கள் வளவன் ' என்ற புனை பெயரில் 'கல்கி'யில் சிறு கட்டுரைகள் எழுதிவந்தார். மதுரையில் வசித்த சிறந்த விமர்சகரான திருவாளர் எஸ். ஆர். கே. அவர்களும் வளவன் என்ற பெயரிலே தினமணி