பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GZD—{೯g್ಗೆ உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாதி) கொண்டார். புதுமைப்பித்தன் எழுத்துமேல் அவர்போல்ஆழ்ந்த காதல் கொண்ட எழுத்தாளர்களைக் கண்டதில்லை. அவரது. அத்தனை கதைகளும் அவர்மன ஆழத்தில் பதிந்திருந்தன. இதை உரையாடும் போது நாம் உணரலாம். - இரவு சென்னை செல்லும்போது கூறினார். "நான் இந்த விழாவிற்கு வந்ததே, புதுமைப்பித்தனின் கையெழுத்துப் பிரதிகள், கடிதங்களை நேரில் பார்க்கும் ஆசைதான் காரணம்' என்றார். . - . - . பள்ளி மைதானத்தில் புதுமைப்பித்தன் படைப்புக்கள், அவரைப்பற்றி விமர்சன நூல்கள், அவரது கையெழுத்துப் பிரதிகள், கடிதங்களை பொருட்காட்சியாக வைத்திருந்தோம். இவை எல்லாம் ரகுநாதன் வீடு சென்று வாங்கி வரப்பட்டவை ஆகும். - - புதுமைப்பித்தன் மட்டுமல்ல, மணிக்கொடி எழுத்தாளர் கள் அனைவருடைய படைப்புக்களையும் ஆழ்ந்து படித்தவர் நா.பா. ந.பிச்சமூர்த்தி, கு.ப்.ரா., ந. சிதம்பரசுப்பிரமணியன், சி.சு. செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம், க.நா.சு. ஆகியோர் நூல்கள் அனைத்தும் படித்தவர் அவர். - நா.பா. அவர்களுக்கு கு.அழகிரி சாமியின் எழுத்துக்களில் அலாதியான ஈடுபாடு உண்டு. சென்னையில் கு. அழகிரி சாமியை சந்தித்து உரையாடுவதை மிகவும் விரும்புவார். குற்றால அருவிகளில் இவர் போல அனுபவித்துக் குளித்த வேறு மனிதரை நான் பார்த்ததில்லை. நான் தெடர்ந்து 30 ஆண்டுகாலம் குற்றலாம் சென்று வந்தவன். குளிப்பதற்கு முன் நன்கு எண்ணெய் தேய்ப்பார். தாராளமாகத் தேய்க்க வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பின், குளிக்க ஆரம்பிப்பார். குறைந்தது அரைமணி முதல் முக்கால் மணிநேரம் வரை.அனுபவித்து குளிப்பார். சிற்றருவி" பெரிய அருவி ஐந்தருவி என்று எல்லா அருவிகளிலும் சென்று நீராடியுள்ளோம். . У . . - ஒரு முறை காலை நேரம் நகருந்து வசதி இல்லாத நேரம். வாருங்கள் நடந்தே போவோம் என்று ஐந்தருவி க்கு நடந்தே அழைத்துச் சென்றார். மீண்டும் குளித்துவிட்டு நடைதான்.