பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியகுளம் அருகிலுள்ள அநுமந்தம்பட்டி கிராமத்தில் நா.பார்த்தசாரதியின் அக்கா மகள் திருமணத்திற்கு திரு.கோவிந்த ராசனுடன் சென்று இருந்தேன். திருமணம் முடித்து திரும்பி வரும் பொழுதுநா.பா.காரில் அவர்குடும்பத்துடன் மதுரை வந்து, அவரது மாமனார்திருமலை ஐயங்கார்ஊரானஅழகர்கோயிலுக்குச் சென்று தங்கினேன். இடையில் மதுரையில் காலேஜ் விடுதியில் நான், நா.பா. பூரணி (அப்பொழுது இளம்வயது)உணவு அருந்தினோம். நா.பா.வின் பையை பூர்ணியிடம் ஒப்படைத்துவிட்டு நானும், நா.பா.வும் கை கழுவ சென்றோம். பின்னாலேயே பூரணி வந்துவிட்டார். திரும்பிச் சென்று பார்த்தால் கைப்பை காணவில்லை, போனது போனதுதான்- ஒரு வாறாக இருக்கின்ற பணத்தில் பெட்ரோல் போட்டு சென்னை திரும்பினோம். அழகர் கோயிலில் நானும், திருமலையும் நா.பா.வின்மாமனார்.திருமலை ஐயங்காரை சென்ற ஆண்டு சென்றபோது சந்தித்தோம்.நா.பா.வின் முயற்சியினால் தமிழ் வித்துவான் படித்து தமிழ் ஆசிரியர் பணிபுரிந்து ஒய்வுபெற்று சென்னையில் வசிக்கின்ற அவரது அண்ணன்.நா. சீனிவாசன் ஐயங்கார் அவர்களை திருமலையுடன் சென்ற ஆண்டுச் சந்தித்தேன். - தீபத்தின் குடும்பத்தைச் சேர்ந்த சங்கரிபுத்திரன் தீபம் முதல் பிரதியை கொடுத்தார். அதிலிருந்து நா.பா.வின. தலையங்க கட்டுரையை இப்புத்தகத்தில் இணைத்துள்ளோம். 1969-செப்டம்பரில் குறிஞ்சிமலர் உதகையில் பூத்துக் குலுங்கியது. உதகையில் இலக்கிய நண்பர்கிருஷ்ணசாமி ஏற்பாடு செய்திருந்த இலக்கிய விழாவில் கலந்துகொள்ள நானும் நா.பா. வுடன் சென்று இருந்தேன். அப்பொழுது ஈ.ரோடு. குருராஜனும் ஈரோட்டிலிருந்து உதகைக்கு எங்களுடன் வந்தார். கிருஷ்ணசாமி காரில்தான் குறிஞ்சி மலர்களை உதகையில் நடுவட்டம் பகுதியில் கண்டுகளித்தோம். ஒர்நாள் இரவு 12 மணிக்கு மேல்-உதகையில் உள்ள முதுமலை காட்டிற்கு காரில் அழைத்து சென்று மிருகங்களை காண்பித்தார். அச்சுக் கோப்பு பகுதிதான் முதலில் தீபம் அச்சகத்தில் ஏற்பட்டது. அதற்கு அண்மையில் மறைந்த ராஜதுரை பொறுப்பேற்று ஆரம்பம் முதல் நா.பா.மறைந்த பிறகு வெளிவந்த கடைசி தீபம் வரை அவர் பணியில் இருந்தார். இவர் திருமணம்