பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது வேலை நீக்கம் நா. பார்த்தசாரதி தாமரை ஆசிரியர் குழுவினர் என் மேலும் முற்போக்கு இலக்கிய ஆசிரியர்கள் மேலுமுள்ள நியாயமான அபிமானத் தினாலே என்னை இப்படி ஒரு கட்டுரை எழுதச் சொல்லிக் கேட்கிறார்கள். ஒரு கட் டுரையினுள் - அல்லது ஒரு சில குறிப்பிட்ட கோண்ங்களில் நின்று கூறி முடித்து விடக்கூடிய விஷயமில்லை இது. வழக்கமாகச் சொல்லிக் கொள்வது போல் இது ஓர் இராமாயணம். இந்த இராமாயணத்தில் எப்படிப் பார்த்தாலும் நான்தான் நிச்சயமாய் இராமனாக இருக்க முடியு ம் என்பது உறுதி.இராவணன் மட்டும் ஒருவனில்லை. நான் சந்தித்த வரை பல இராவணர்கள். இன்னொருவனுடைய நியாயத்தை யும் சுதந்திரத்தையும் பறித்துக் கொண்டுபோய்ச்சிறை வைப்பது கூட இராவணத் தன்மைதான். தர்மத்தையும், சங்கராச்சாரி யாரையும் போற்றிக் கொண்டே அதர்மத்தையும் அடக்கு முறையையும் அமுல் நடத்துகிறவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகமும், தயவுக்குக்காத்து நிற்கும் சராசரி எழுத்தாளர்களும் மன்னிக்கத் தயாராக இருக்கலாம். ஆனால் நான் மன்னிக்க மாட்டேன். நீங்கள் மன்னிப்பதையும் விரும்ப மாட்டேன். தங்களுக்கு முன் வந்து கைகட்டி நிற்கவேண்டுமென்றும் தங்களைக்குறிப்பிட்டுப்பேசும்போது"பெரியவர்இருக்கிறாரா? பெரியவர் என்ன சொல்கிறார்?" என்றெல்லாம் விசாரித்துப் பெரியவர் பட்டம் கொடுக்க வேண்டுமென்றும் எதிர்பார்க்கிற அநியாயத்தை எழுதப்புகுந்தால் நான் எரிமலையாகிவிடுவேன். நேர்மையும், பெருமையும் உள்ள சில பெரிய அரசியல்தலைவர்கள் கூட இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்டமுதலாளிகளுக்குத் துணை நின்று நாட்டு மக்கள் தங்களால் துணை பெறுகிற வரை நம்பும் படி மருட்டி விடுகிறார்களே என்று நினைக்கும் போதுதான் தமிழக நிலை பரிதாபமாயிருக்கிறது. விபூதிப்பூச்சு, பஞ்சகச்சம், தீட்சிதர்களின் கதா காலட்சேபங்களில் போய் மாலை நேரங்க ளில் உட்காருதல்-ஆகிய புறச்செயல்களாலேயே பட்டினத்தில் ஒரு ஒழுக்கங்கெட்டவன்தன்னை யோக்கியனாகக் காண்பித்துக் கொள்ள முடியும் என்பதை நேருக்கு நேர்பார்த்து உணர்ந்தேன். இந்தப் போலிப் பக்தியை மதித்துப் புகழாவிட்டால் கெட்ட