பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன் } – - - - -( 77) பெயர் சுமத்தி ஆளைத் தெருவில் நிறுத்த முயல் வார்கள் என்பதையும் உணர்ந்தேன். 'பேஷாப் போச்சு-என்று தனக்குத் தெரிந்ததோ தெரியாததோ - எதையும் புகழ வேண்டும். ஒரு வேளை அதைப் புகழ்கிற தகுதி தனக்கு இல்லையானால் தலையாட்ட வேண்டும்- சமஸ்கிருதத்திலும் - இங்கிலீஷிலும் இருக்கிற சங்கராச்சாரியார் கதையைக் குழப்பமான தமிழில் மொழிபெயர்த்துப் போட்டுச் சொந்தப் படைப்பு போல் வேஷமிட வேண்டும். - தமிழகத்திலுள்ள ஜனரஞ்சக தமிழ்ப் பத்திரிகைகளை எந்தப் புத்தியின் சக்தியும் இப்போது இய்க்கவில்லை. 'சர்க்குலேஷன் மானேஜர்கள் தான் பத்திரிகைகளின் சர்வாதி காரிகளாக இருந்து அவற்றை இயக்குகிறார்கள். முதலாளி களைச் சொக்குப்பொடி போட்டு இவர்கள் மயக்க - இவர்கள் 'காதலில் முதலாளிகளும் எல்லாம் செய்கிறார்கள். ஒரு பத்திரிகைக் காரியாலயத்தில் நீடித்திருக்க நியாயமும் " நேர்மையும், புத்தியும், திறமையும் மட்டும் போதாதென்று தெரிகிறது. நியாயத்தை ஆதரிப்பது தவிர-அல்லது நியாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல்-அங்குள்ளசக்தி மிக்க மனிதர்களின் ஆபாசங்களை ஆதரித்தாலே பதவி உயர்வு, பணச் செழிப்பு எல்லாம் கிடைத்து விடும். . w நியாயத்தை ஆதரித்தால் நாம் அலட்சியப்படுத்தப் பெறலாம் அல்லது அவமானப்படுத்தப்பெறலாம்.பத்திரிகையை நடத்துகிற வரை மட்டுமே எல்லாமாகப் பேசி நம்பித் திரிந்து நாத்தழுத்தழுக்கப் புகழ்ந்து நமது சொந்தத்தன்னம்பிக்கைகளை விட்டு விட வேண்டும். நீங்கள் அவர்களுக்கு உழைப்பையும் கொடுத்து அதற்கு மேல் விலைமதிப்பற்ற விசுவாசத்தையும் கொடுக்க வேண்டும். அவர்கள் விசுவாசம் உங்களுக்குக் கிடைக்காது. அதாவது நீங்கள் அவர்களது காரியம் சாதிக்கும் திறமைகளைக் கண்டு வியந்து புகழ்ந்து மலைக்க வேண்டும். அவர்களோ உங்கள் புத்தியையும், திறமையையும் வியக்கவும் மாட்டார்கள் விசுவாசிக்கவும் மாட்டார்கள். ஒவ்வொரு பத்திரிகை முதலாளியும் தன் வைப்பாட்டிமார்கள் தனக்குச் சிசுருவுை செய்வது போல் அறிவின் பிரதிநிதியாகிய ஆசிரியனும் தொண்டு செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறான். ஆனால் மதிப்பதில்லை. இப்படி ஒப்பிடுவது கொஞ்சம் பச்சையாயிருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. . . . . . . . .